ரயில் புறப்படும் நேரத்திற்கு கிட்டத்தட்ட 15 முதல் 20 நிமிடங்கள் முன்னதாகவே இனி நீங்கள் ரயில் நிலை யத்திற்குச் செல்ல வேண்டும். தற்போது விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால் விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் முன்னதாகவே நீங்கள் விமான நிலையம் செல்ல வேண்டும்.
அதன் பின் உங்களிடம் பரிசோதனை நடைபெறும். நீங்கள் கொண்டு செல்லும் பொருட் களையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்வார்கள். பரிசோதனை அனைத்தும் முடிவடைந்த பின்னர் தான் நீங்கள் விமானத்தில் பறக்க இயலும்.
தற்போது இதேபோன்ற முறையை ரயில் நிலையங் களிலும் கொண்டு வர ரயில்வே திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை கொண்டு இந்திய ரயில்வே இதனை கொண்டுவர உள்ளது.
தூங்கும் போது திடீரென கீழே விழுவது போன்ற உணர்வு ஏன்?
இதன் காரணமாக ரயில் புறப்படும் நேரத்திற்கு 15 முதல் 20 நிமிடங்கள் முன்னதாகவே நீங்கள் ரயில் நிலையத்தை சென்றடைய வேண்டும். அதன்பின் சோதனை நடைபெறும். அதற்கு பிறகுதான் நீங்கள் பதிவு செய்த ரயிலில் பயணிக்க முடியும்.
இந்த மாதம் கும்பமேளா தொடங்க உள்ள நிலையில் அலகாபாத்தில் இந்த முறை செயல் படுத்தப் பட்டுள்ளது. அது மட்டுமின்றி நாட்டில் உள்ள 202 ரயில் நிலையங்களில் இந்த முறையை அமல்படுத்த முயற்சி மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
உடல் நோய்களைக் வெளிக்காட்டும் நகங்கள் !
ரயில் நிலையத்தின் அனைத்து வழிகளிலும் சோதனை உபகரணங்கள் இடம் பெற்றிருக்கும். இதுவே பயணிகளை சோதனை செய்யும் எனத் தெரிகிறது.
இருப்பினும் விமான நிலையங்களை போல சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னதாக வர தேவை யில்லை. சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் முன்னதாக ரயில்வே நிலையத்தை வந்தடைந் தால் போதும்.
இந்த முறையை அமல் படுத்தும் போது அதிகப் படியான பாதுகாப்பு இருக்கும். அதேசமயம் பாதுகாப்பு ஊழியர்கள் குறைவாகவே இருந்தாலும் போதும் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Thanks for Your Comments