சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந் துள்ளனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28-ம் தேதி சீனாவின் புஜியான் மாநிலம் யாங்டாங் மாவட்டம் லோங்யான் பகுதியில்
உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 9 தொழிலா ளர்கள் பணி புரிந்து கொண்டிருந்த போது, திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் அங்கு பணி புரிந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இருவரை உயிருடன் மீட்கப் பட்டனர். படுகாயம் அடைந்த ஒருவரை அருகிலுள்ள மருத்துவ மனைக்கு அனுப்பினர். மண் குவியலில் சிக்கி யுள்ள மற்றொருவரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
இது விபத்து குறித்து சுரங்க உரிமை யாளரிடம் விசாரணை நடந்து வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித் துள்ளனர்.
இந்நிலை யில் ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் 87 தொழிலா ளர்கள் பணியாற்றி கொண்டிருந்த போது, சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து அவர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந் துள்ளனர்.
மேலும் 66 பேர் மீட்புக் குழுவினர் மூலம் பாதுகாப்பாக மீட்கப் பட்டனர். சுரங்கத்தில் சிக்கிய 2 பேர் இன்னும் மீட்கப்பட வில்லை. அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட் டுள்ளனர்.
இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து ஏற்படும் நிலக்கரி சுரங்கத்தின் விபத்துக்கள் சுரங்க பணி யாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments