மக்களுக்குப் புத்தாண்டு பரிசாக, எல்இடி டிவி, சினிமா டிக்கெட், கம்ப்யூட்டர் மானிட்டர், மாற்றுத் திறனாளி களுக்கான உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட 23 வகை பொருட்கள், சேவைகளின் குறைக்கப் பட்ட ஜிஎஸ்டி வரி இன்று முதல் அமலுக்கு வந்தது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் ஜிஎஸ்டி வரி வீதத்தில் பல்வேறு சீரமைப்பு செய்யப்பட்டு வரிக் குறைப்பு செய்து அறிவிக்கப் பட்டது.
சினிமா டிக்கெட் கட்டணம், எல்இடி டிவி, கம்ப்யூட்டர் மானிட்டர், பவர் பேங்க் உள்ளிட்ட 23 பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான வரி குறைக்கப் பட்டது.
ஆடம்பர பொருள்கள், உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் பொருள்கள், சிமெண்ட், பெரிய திரை கொண்ட டிவி, ஏசி ஆகியவை அதிக பட்சமாக 28 சதவீத வரி விதிப்புக் குள் கொண்டு வரப்பட்டன.
இசைப் புத்தகங்கள், பதப்படுத் தப்பட்ட காய்கறிகள் ஆகிய வற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டது.
டிஜிட்டல் கேமிரா, விடியோ கேமிரா ரெக்கார்டர், கியர் பாக்ஸ், பயன் படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத மாகக் குறைக்கப் பட்டது.
மாற்றுத் திறனாளிகளின் வாகன பொருள்கள், நிலக்கரி சாம்பலில் தயாரிக் கப்பட்ட செங்கல், வாக்கிங் ஸ்டிக், பளிங்கு மார்பில் ரபிள் உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீத மாகக் குறைக்கப் பட்டது.
வாகனங்களில் 3ஆம் நபர் காப்பீட்டுத் தொகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீத மாகக் குறைக்கப் பட்டது.
ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீத மாகவும், ரூ.100க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத மாகவும் குறைக்கப் பட்டது.
32 அங்குலம் வரை கொண்ட டிவி, கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப் பட்டது.
இந்த வரி குறைப்பு அனைத்தும் இன்று(செவ்வாய்கிழமை) முதல் நடைமுறை க்கு வந்துள்ளது.
Thanks for Your Comments