சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் பிளாஸ்டிக் தடை மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் இறைச்சி குறித்த சோதனை யில் 233 கிலோ கெட்டுப் போன இறைச்சி களும் 53 கிலோ பிளாஸ்டிக் கவர்களும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தப் பட்டு வருவதோடு உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் மண்டல சுகாதாரத் துறை சார்பில் சோழிங்க நல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெருங்குடி, துரைப் பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.
மண்டல சுகாதார நல அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் கடைகள், சூப்பர் மார்க்கெட், வணிக வளாகங்கள், ஆட்டு இறைச்சி கோழி இறைச்சிக் கடைகளில் ஆய்வு நடத்தப் பட்டது.
இந்த ஆய்வில் 53 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இறைச்சிக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்த 233 கிலோ ஆடு மற்றும் கோழி இறைச்சி பறிமுதல் செய்யப் பட்டன.
அதை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனர். இது குறித்து மண்டல சுகாதார நல அலுவலர் கார்த்திகேய னிடம் பேசினோம். ``தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது.
இதனால், அதிரடி சோதனையில் ஈடுபட்டோம். இந்தச் சோதனையில் கால்நடை மருத்துவர் களும் ஈடுபட்டனர். அப்போது ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கடைகளில் 233 கிலோ ஆடு, கோழி இறைச்சிகள் சுகாதாரமற்ற முறையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனால் அதை குப்பை கிடங்கில் கொட்டி அழித்துள்ளோம். மேலும் 53 கிலோ பிளாஸ்டிக் கவர்களும் பறிமுதல் செய்யப் பட்டது. ஜனவரி 1-ம் தேதி நடந்த சோதனை யில் 1,000 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இந்தச் சோதனை தொடரும்" என்றனர்.
பொது மக்கள் கூறுகையில், ``சென்னை எழும்பூருக்கு வெளி மாநிலத்தி லிருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சியைப் பறிமுதல் செய்த போது நாய் இறைச்சி என்ற தகவல் பரவியது.
அதன் பிறகு பறிமுதல் செய்யப் பட்டது ஆட்டு இறைச்சி என ஆய்வில் தெரிய வந்தது. தற்போது, சென்னையில் 233 கிலோ சுகாதாரமற்ற இறைச்சி பறிமுதல் செய்துள்ளனர். எனவே, தரமானதை விற்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், ``சில வியாபாரிகள் செய்யும் தவறால் ஒட்டு மொத்த வியாபாரிக ளுக்குக் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
ஆடு, கோழி இறைச்சிகள் கெட்டுப் போனால் அதை விற்பதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், அதை மறைத்து விற்பதால் சிக்கல் ஏற்படுகிறது" என்றனர்.
மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் கூறுகையில், ``ஓ.எம்.ஆர். சாலையில் நடந்த சோதனை போல ஈ.சி.ஆர் சாலையிலும் விரைவில் சோதனை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடையோடு சுகாதாரமற்ற உணவுப் பொருள் களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளதால் அதை யாரும் பயன்படுத்த வேண்டாம். முதலில் சிக்குபவர் களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறோம்.
மேலும்
தொடர்ந்து பிளாஸ்டிக் தடையை மீறிச் செயல் படுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் தடை உத்தரவுக்குப் பொது மக்களும் தங்களின் முழு ஒத்துழை ப்பைக் கொடுக்க வேண்டும்" என்றனர்.
Thanks for Your Comments