பணிக்குச் சேர்ந்த 2 வாரத்தில் இளம் பெண்ணைப் பலிவாங்கிய சிங்கம் !

0
வடக்கு கரோலினா வில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள சிங்கம், 22 வயதுப் பணி யாளரைப் பலி வாங்கியது. இதனை யடுத்து சிங்கத்தைச் சுட்டுக் கொன் றுள்ளனர்.


வடக்கு கரோலினாவில் உள்ள கேஸ்வெல் கவுண்டியில் வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு பயிற்சி பெறுவதற்காக அலெக்சாண்டர் ப்ளாக் என்னும் 22 வயது இளம்பெண் பணியில் சேர்ந்துள்ளார்.

வழக்கமான தூய்மைப் பணிக்காக தனது குழுவினருடன் உள்ளே சென்றார் ப்ளாக். சரணால யத்தில் இருந்த ஏராளமான சிங்கங்களில் ஒன்று, கூண்டில் இருந்து தப்பித்தது. 
அது மனிதர்கள் இருக்கும் இடத்துக்கு வந்த போது, அங்கிருந்த ப்ளாக்கைக் கொன்றது. மற்றவர்கள் மீது சிங்கம் பாயும் முன், அங்கிருந்த அதிகாரிகள் சிங்கத்தைச் சுட்டுக் கொன்றனர்.

இதுகு றித்து சரணாலய த்தின் தரப்பில் கூறும்போது, ''பூட்டப்பட்ட அறையில் இருந்து சிங்கம் எப்படி வெளியே வந்தது என்று தெரிய வில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


சிங்கத்தைச் சுட்டுக் கொல்லும் முன்னர், மயக்க மருந்து கொடுக்க முயற்சித்தோம். அந்த முயற்சி தோல்வி அடைந்த தால், வேறு வழியின்றி சிங்கத்தைக் கொன்றோம்'' என்று விளக்கம் அளித்துள்ளனர்.

கரோலினா மாகாணத்தில் உள்ள பர்லிங்டலினில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. சிங்கம் கொல்லப் பட்டதை அடுத்து, சரணாலயம் தற்காலிக மாக மூடப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings