தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில், நேற்று முன்தினம் இரவு, பொருட்கள் வாங்குவது போல் வந்த 2 பெண்கள்,
அங்கிருந்த மளிகை பொருட்களை திருடி, தங்களின் உள் பாவாடையில் உள்ள ரகசிய பையில் மறைத்துக் கொண்டு தப்ப முயன்றனர்.
கடை ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில், அந்த பெண்களை பிடித்து சோதனை செய்த போது,
உள் பாவாடையில் இருந்த ரகசிய பையில், முந்திரி பருப்பு 5 கிலோ, காய்ந்த மிளகாய் 1 கிலோ, புளி 1/2 கிலோ ஆகியவை இருப்பது தெரிய வந்தது.
அவர்களை பிடித்து தி.நகர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், திருவெற்றியூர் மேட்டுக் குப்பம் மாதா கோயில் தெருவை சேர்ந்த மேரி (50), அதே பகுதியை சேர்ந்த வசந்தா (64) என்பது தெரிந்தது.
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தி.நகர், பாண்டிபஜார் பகுதியில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆந்திர மாநிலம்,
ராஜீவ்காந்தி நகர், சார்மினர் பகுதியை சேர்ந்த அங்கம்மாள் (45), கவுரி (29), சதீஷ்(23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி கரிமேடு பி.வி.காலனியை சேர்ந்த ரவுடி திவாகர் (22) கொலை வழக்கில் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 107வது தெருவை சேர்ந்த நித்யாதரன் (25) என்பவர், நேற்று முன்தினம் அம்பத்தூர் நீதி மன்றத்தில் சரணடைந்தார்.
கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23) என்பவரை தாக்கி, அவரது ஆட்டோவை சேதப்படுத்திய அதே பகுதியை சேர்ந்த வினோத் குமார் (27), விக்னேஸ்வரன் (25), மணிமாறன் (24) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
பாரிமுனை கொத்தவால் சாவடி சீனிவாசா ஐயர் தெருவை சேர்ந்த புஷ்பா (84) என்பவர் மீது, மயக்க பொடி தூவி, 2 சவரன் செயின், ₹2 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 2வது தெருவை சேர்ந்த மதன்குமார் (30) என்பவர், தனது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மன முடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,
அனுமதியின்றி பேனர் வைத்ததாக அக்கட்சி நிர்வாகிகள் ஷாநவாஸ், நாகசாமி, வெங்கடேசன், பொன்னி வளவன், குமார், சீனிவாசன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சீனிவாசன் (43) என்பவர் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 28 சவரன் நகை, வைரத் தோடு, வைர மோதிரம் ஆகியவை திடீரென மாயமானது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேடவாக்கத்தில் ஆட்டோவில் சென்று பெண்ணிடம் செயின் பறித்த வியாசர் பாடியை சேர்ந்த அமுல்ராஜ் (20), சதிஷ்குமார் (20), ராஜேஷ் (20), புளியந்தோப்பை சேர்ந்த அசோக் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போரூர் மங்களா நகரை சேர்ந்த செல்வ மனோகர் என்பவர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து ₹1.26 கோடிக்கு விற்ற ராஜ்குமார் (45), கோபிநாதன் (45) லோகநாதன் (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலைய த்தில் கிண்டியை சேர்ந்த ஜீவா (26) என்பவரிடம் 5 சவரன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.
விபத்தில் ஏட்டு பலி
வில்லிப்புத்தூரை சேர்ந்த கருப்பசாமி (38), செங்குன்றம் காவல் நிலையத் தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக வேலை செய்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் மாலை, மணலி சிபிசிஎல் நிறுவனம் அருகே பைக்கில் சென்ற போது, எதிரே வேகமாக வந்த ஷேர் ஆட்டோ, இவரது பைக் மீது மோதி கவிழ்ந்தது.
இதில், ஆட்டோவில் வந்த 6 பேர் மற்றும் ஏட்டு ஆகியோர் படுகாய மடைந்தனர்.
அவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு கருப்பசாமி, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.
மேலும்
Tags:
Thanks for Your Comments