மதுரையில் ரூ. 2 கோடி கேட்டு மனைவி தரப்பினர் மிரட்டுவ தாக காவல் ஆணையர் அலுவலகத்தில் கணவர் புகார் கொடுத் துள்ளார். மதுரை திருநகரைச் சேர்ந்தவர் மணிவர்மா (43).
இவர் காவல் ஆணையர் அலுவலக த்தில் கொடுத்துள்ள புகார் மனு:
மதுரை யாகப்பா நகரில் ஆன்லைனில் உணவுப் பொருள் வர்த்தகம் செய்யும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவன த்தை நிவேதனா என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தில் நான் உழைக்கும் பங்குதாரராக (working partner) உள்ளேன்.
இந்நிலை யில், எனது மனைவி பிரேமலதா, அவரது தம்பி கார்த்திகேயன், அவரது மனைவி லட்சுமி கஜேந்திரனி ஆகியோர் எனது சொத்து களை அபகரிக்க திட்டமிட்டு,
சொத்து களை அவர்கள் பெயருக்கு மாற்றித் தருமாறு எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர். மேலும் நிவேதனா வின் வீட்டுக்கும் சென்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
எனது மனைவி பிரேமலதாவின் தூண்டுதலின் பேரில் கேவி. ராஜா என்பவர் என்னிடமும், நிவேதனாவிடமும் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டி வருகிறார் என புகாரில் தெரிவித் துள்ளார்.
இதுபற்றி விசாரிக் குமாறு அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் ராமலிங் கத்துக்கு, மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவா சீர்வாதம் உத்தர விட்டார்.
Thanks for Your Comments