ரஷ்யாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தை ஒன்று 35 மணி நேரங்களு க்குப் பின்னர் உயிருடன் மீட்கப் பட்டது. இந்தக் கட்டிட விபத்தில் இதுவரை 37 பேர் பலியாகி யுள்ளனர்.
இதுகுறித்து ரஷ்யாவின் அவசர சிகிச்சைப் பிரிவு அதிகாரி தரப்பில், ''ரஷ்யாவின் உள்ள மங்னிட்டோ கோர்ஸ் நகரில் உள்ள 48 தளங்களைக் கொண்ட அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்தது.
இதில் ஆண் குழந்தை ஒன்று சிக்கிக் கொண்டது. இந்த நிலையில் குழந்தையை மீட்கும் பணியில் தேடுதல் மீட்புப் பணி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கடும் குளிரில் நடத்தப்பட்ட இந்தத் தேடுதல் வேட்டையில் குழந்தை 35 மணி நேரங்களு க்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டது.
இது ஒரு அதிசியமான நிகழ்வு. மீட்கப்பட்ட குழந்தை க்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப் பட்டது. அக்குழந்தை யின் தாயும் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்தக் கட்டிட விபத்தில் இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 22 பேர் உடல்கள் கைப்பற்றப் பட்டுள்ளன' என்று தெரிவிக்கப் பட்டது.
மீட்கப்பட்ட குழந்தை பிங்க் நிறத்தில் சாக்ஸ் அணிந்திருந் ததாகவும், குழந்தைக்கு ஆபத்தான வகையில் காயம் ஏற்பட வில்லை என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட் டுள்ளன.
குழந்தையை மீட்ட மீட்புப் பணி வீரர்களுக்கு அங்கு குடியிருந்த மக்கள், ரஷ்ய ஊடகங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Thanks for Your Comments