முதன் முதலில் இந்த ரோபோ தான் கடலில் இவ்வளவு அதிக ஆழம் சென்றுள்ள கருவி என்கிறார்கள். சீனாவைச் சேர்ந்த அறிவியல் ஆய்வு நிறுவனமான ஷென்யாங் செயற்கை நுண்ணறிவு கல்வி நிறுவனம் இதை தயாரித் துள்ளது.
6 ஆயிரத்து 1 மீட்டர் ஆழத்தை 3 மணி நேரத்தில் சென்ற இந்த ரோபோ கடல் வாழ் ஆராய்ச்சிக் கான முக்கிய பங்களிப்பை செய்யும் என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறியுள்ளனர்.
கடலின் மண் வளம், கடல் நீரோட்டம், புவியியல் ஆய்வு களுக்கும் பயன்படுமாம் .
கடலுக்கடி யில் பாறைகளை உடைத்துக் கொண்டு வரும் திறன் கொண்ட இந்த ரோபோ, இதற்கான சோதனையில் 400 கிலோ பாறைகளை யும், மணலையும் வெட்டி எடுத்து வந்துள்ளது.
இதில் ஒரு பாறை கல் மட்டுமே 65 கிலோவு க்கு இருந்துள்ளது. பாறைகளை மட்டுமல்ல மணல் துகளைக்கூட தனியாக எடுக்கும் திறன் கொண்டதாம்.
இதற்கேற்ப இந்த இயந்திரத்தில் பல்வேறு வகையிலான சுரண்டும் கருவிகளும், வெட்டும் கருவிகளும் உள்ளன. 7 ஆயிரம் மீட்டர் வயர் இணைப்பு மூலம் இந்த ரோபோ இயக்கப் படுகிறது.
மிக பாதுகாப்பாக முறையில் மின் ஒயர்கள் திரும்பவும் சுருட்டி வைத்துக் கொள்ளப் படுகிறது.
கடல் மேலிருந்து கப்பல் மூலம் இதை இயக்குகி றார்கள். 360 டிகிரி சுற்றளவில் இதை இயக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.
Thanks for Your Comments