சபரிமலை சன்னி தானத்திற்கு பெண்களை அழைத்து செல்ல 7 நாள் திட்டம் !

0
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியான கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதிக்கு பிறகு கேரள அரசு எடுத்த எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. 

சபரிமலை கர்ம சமிதி, அய்யப்ப பக்தர்களின் கடும் எதிர்ப்பை மீறி எந்த பெண்க ளையும் போலீசாரால் சன்னிதானம் அழைத்து செல்ல முடியவில்லை.

இதனை பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் பெண்கள் நல ஆர்வலர்கள் பலரும் விமர்சித்தனர். இது ஆளும் கம்யூனிஸ்டு அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு என்று கூறப்பட்டது.

இதை யடுத்து மகரவிளக்கு சீசன் காலத்தில் எப்படியாவது பெண்களை சபரிமலை சன்னி தானத்துக்கு அழைத்து செல்ல அரசு முடிவு செய்தது. இதற்கு பொருத்த மான நபர்களை கண்டறியும் பணியில் கேரள போலீசார் ஈடுபட்டனர்.

அவர்களின் பார்வையில் பட்டவர்கள் மலப்புரம் கொயிலாண்டியை சேர்ந்த பிந்து (வயது 40), கோழிக் கோட்டை சேர்ந்த கனகதுர்கா (44) என்ற 2 பெண்கள். 

இவர்களில் பிந்து கல்லூரி ஆசிரியை, மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தீவிர ஆதரவாளர். அவரது தோழி கனகதுர்காவும் இதே சிந்தனை கொண்டவர். கூட்டுறவு ஊழியர்.

பிந்து, கனகதுர்கா இருவரையும் சபரிமலைக்கு அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர். 

சன்னிதானம் அருகே போராட்டக் காரர்கள் தடுப்பு சுவர் போல திரண்டு இரண்டு பெண்களை யும் வழிமறித்தனர். இதனால் சன்னி தானம் செல்ல முடியாமல் பிந்துவும், கனக துர்காவும் பாதியிலேயே வீடு திரும்பினர்.

சன்னிதானம் செல்ல முடியாமல் திரும்பிய பிந்து, கனகதுர்கா இருவரும் அதன்பின்பு வீடு திரும்ப வில்லை. 

திடீரென அவர்கள் மாயமாகி விட்டனர். உறவினர்கள் அவர்களை தேடிய போது கோட்டயம் அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப் பட்டிருப்ப தாக போலீசார் தெரிவித்தனர். உறவினர்கள் அங்கு சென்ற போது ஆஸ்பத்திரி யில் அவர்கள் இல்லை.

எனவே அவர்கள் இருவரும் போராட்டக் காரர்களு க்கு பயந்து தலைமறை வாகி விட்டதாக கூறப்பட்டது. இந்து அமைப்பு களும் இதை நம்பினர்.

போராட்டக் காரர்களின் நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த கேரள போலீசார் திட்ட மிட்டனர். அதன்படி பிந்து, கனகதுர்கா இருவரையும் மீண்டும் சபரிமலை அழைத்து செல்ல போலீசார் ரகசிய திட்டம் வகுத்தனர்.

சன்னிதானம் செல்ல போலீசார் முடிவு செய்த நாள் ஜனவரி 2. இந்த நாளில் சபரி மலையில் கூட்டம் அதிகம் இருக்காது என்று போலீசார் கருதினர். இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.


ஜனவரி 1-ந்தேதி கேரள அரசு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மகளிர் மனித சுவர் போராட்டம் நடத்தியது. 

இதில் யார்- யார் பங்கேற்கி றார்கள் என்பதை பார்க்க போராட்டக் காரர்கள் அவரவர் ஊருக்கு செல்வார்கள் என போலீசார் எதிர் பார்த்தனர். அவர்கள் எதிர் பார்த்தபடி போராட்டக் காரர்கள் பலரும் ஊர் திரும்பினர்.

இச்சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட போலீசார் கோட்டயம் எஸ்.பி. ஹரிசங்கர், உளவுத் துறை டி.ஐ.ஜி. சுரேந்திரன் ஆகியோர் மேற் பார்வையில் பிந்து, கனகதுர்கா இருவரையும் சபரிமலை அழைத்து செல்ல திட்ட மிட்டனர்.

இத்திட்டத்தை நிறைவேற்ற தனிப்படை அமைக்கப்  பட்டது. அவர்கள் சாதாரண உடையில் பம்பை வந்தனர். 

நேற்று அதிகாலை வந்து சேர்ந்த போலீஸ் படை பிந்து, கனகதுர்கா இருவருக்கும் சாதாரண உடையில் பாதுகாப்பு அளித்தனர்.

சாதாரண போலீசாரின் பாதுகாப்புடன் பிந்து, கனகதுர்கா இருவரும் சபரி மலைக்கு பொருள்கள் கொண்டு செல்லும் டிராக்டர் பாதையில் அழைத்து செல்லப் பட்டனர். 

அதிகாலை 1.30 மணிக்கு இவர்களின் பயணம் தொடங்கியது. 3 மணிக்கு பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்றடை ந்தனர்.

அப்போது கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் பாடப்பட்டது. இந்த நேரத்தில் 18 -ம் படியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் ஊழியர்கள் கோவிலின் பின்பகுதியில் உள்ள வாயில் வழியாக செல்லத் தொடங்கினர்.

அவர்களுடன் பிந்துவும், கனக துர்காவும் இணைந்து கொண்டனர். அப்போது அவர்களை அடையாளம் கண்டு கொண்ட சில ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அங்கு நின்ற உயர் அதிகாரிகள் அவர்களை விரட்டினர்.

எதிர்ப்பு அகன்றதும் பிந்து, கனகதுர்கா இருவரும் மிக எளிதாக சன்னி தானம் சென்ற டைந்தனர். அங்கு சாமி தரிசனமும் செய்தனர். இதனை அர்ச்சகர்கள், தந்திரிகள் யாரும் கவனிக்க வில்லை.

பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னி தானத்தில் தரிசனம் முடிந்து பம்பை திரும்பிய பின், பத்திரிகை யாளர்களை சந்தித்து தரிசனம் செய்ததை கூறிய பிறகே இந்த விபரம் பக்தர்களுக்கு தெரிய வந்தது.


இச்சம்பவத் திற்கு முழுக்க, முழுக்க போலீஸ் உயர் அதிகாரிகளே காரணம் என்றும் இதற்காக அவர்கள் கடந்த ஒரு வாரமாக திட்டமிட்டு காய் நகர்த்திய விபரத்தையும் அறிந்து கொண்ட பக்தர்கள் போராட்ட த்தில் குதித்தனர்.

தற்போது அவர்களின் போராட்டத்தை முறியடிக்கும் முயற்சிக ளில் போலீசார் இறங்கி உள்ளனர். 

அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பெண்கள் இருவரை சன்னிதானம் வரை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்து விட்டோம் என்று அரசு மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings