தெற்கு தாய்லாந்து பகுதியில் புயல் சீற்றம் ஏற்பட்டுள்ள தால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளதாகவும் நகோன் சி தாமராத் மாகாணத்தில் 80 ஆயிரம்
மக்களை வெளியேற்ற அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தின் தெற்கு கடல்பகுதியில் புயல் நிலை கொண்டுள்ளது.
பபுக் என பெயரிடப் பட்டுள்ள இந்த புயல், 75 கி.மீ முதல் 95 கி.மீ. வேகத்துடன் இன்று மதியம் கரையைக் கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அச்சமயம் அதிக மழைப் பொழிவினால் தெற்கு தாய்லாந்து கடற் கரையோரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுத்தும்.
முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை காரணமாக நகோன் சி தாமராத் மாகாணத்தில் 80 ஆயிரம் மக்களை வெளியேற்ற அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
தற்சமயம் 8 ஆயிரம் பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர். முன்னெச்செ ரிக்கை நடவடிக்கையாக, சாமுய், தாவோ மற்றும் பாங்கான் ஆகிய தீவுகளுக்கு கப்பல் மற்றும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப் பட்டுள்ளது.
மேலும்
மேலும் பாங்காங் விமானப் போக்கு வரத்துத் துறை சாமுய் ஏர்போர்ட்டி லிருந்து விமானங்கள் புறப்படவும் அனுமதிக்கவும் அனைத்து விமானங் களையும் ரத்து செய்துள்ளது. மீன் பிடிக்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
Tags:
Thanks for Your Comments