தன் வீட்டு நிகழ்ச்சியில் 90,000 பேர்... தம்பி மகள் திருமணத்தில்.. அமைச்சர் அப்செட் !

0
போக்குவரத்துத் துறை அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கர் ஞாயிறு அன்று நடத்திய தனது மகள் பூப்புனித நீராட்டு விழாவில் 90,000 பேரை திரட்டி மிரள வைத்தார். ஆனால், திங்கள் கிழமை நடந்த அவரின் தம்பி மகள் திருமணத்தில் சிலநூறு பேர் கூட கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரா கவும், அ.தி.மு.க கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளரா கவும் இருப்பவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் தன் மகள் அட்ஷய நிவாதாவுக்கு ஞாயிறன்று இரவு பூப்புனித நீராட்டு விழாவை நடத்தினார். அவரின் தம்பி மகள் தாரணி, சிவா திருமணம் திங்கள் கிழமை காலையில் நடந்தது. 


கரூர் டு சேலம் பைபாஸில் வெண்ணைமலை பகுதியில் உள்ள அட்லஸ் திருமண மண்டபத்தில்தான் இரண்டு விழாக்களும் நடைபெற்றன. முதல்நாள் அமைச்சரின் மகள் சடங்கு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலைச்சர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் கலந்து கொண்டனர். 

இவர்களைத் தவிர கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த விழாவை வைத்து கரூரில் தனக்கிருக்கும் செல்வாக்கை அமைச்சர், முதல்வருக்கு காட்ட நினைத்தார். 

அதற்காக, விழாவை படு பிரமாண்டமாக நடத்தி ஏக தடபுடல் பண்ணினார். கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண் - 7 யை ஒட்டிதான் இந்த விழா நடந்தது. நெடுஞ்சாலை யில் பேனர்கள் வைப்பதற்கு உயர் நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளது. 
ஆனால், அமைச்சர் தரப்பு நெடுஞ்சாலை முழுவதும் ஓரங்களிலும், நடுவில் மீடியேட்டர் தடுப்புக் கட்டைகளிலும் பலநூறு பேனர்களை வைத்து மிரள வைத்தனர். அதோடு, மீடியேட்டர் கட்டையை இருபதடி தூரத்துக்குப் பெயர்த்து எடுத்து,அங்கே வாகனங்கள் குறுக்குமறுக்கு மாக போக வைத்து, டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்தனர்.
அதோடு, மாவட்டம் முழுக்க இருந்து ஞாயிறன்று 1000 பேருந்துகளிலும் தனியார் பள்ளி, கல்லூரி களுக்குச் சொந்தமான வாகனங்களில் மக்களை ஏற்றி வந்தனர். அப்படி இப்படி என்று 90,000 பேரை ஞாயிறன்று திரட்டிக் காட்டியது அமைச்சர் தரப்பு. 

அண்ணா தொழிற் சங்கத்தை சேர்ந்தவர் களையும் திரட்டி வந்தனர். முதல்நாள் முதல்வர் பத்து நிமிடமே நிகழ்ச்சியில் பங்கேற்றார். தனது தம்பி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் ஞாயிறன்றே வைத்தார். 'ஒரு மணி நேரம் இருந்து நிகழ்ச்சியை சிறப்பிப்பார்.


அதன் மூலம் தனது தடல்புடல் ஏற்பாட்டை மெச்சுவதோடு, தான் கூட்டிய கூட்டத்தைப் பார்த்து வாய்பிளப்பார் முதல்வர்' என்று நினைத்த அமைச்சர் தரப்பு சப்பென்றானது. இந்த நிலையில், நம்மிடம் பேசிய கரூர்வாசிகள் சிலர்.
`அதனால், மறுநாள் அதே அட்லஸ் கலையரங்கில் திங்கள் கிழமை காலையில் நடைபெற்ற தம்பி மகள் தாரணி திருமணத்தைப் பெரிதாக அமைச்சர் கண்டுக்கலை. 
முதல்நாள் தனது மகள் சடங்கு நிகழ்ச்சியில் 90,000 பேரை திரட்டிக் காட்டிய அவரால், தம்பி மகள் திருமணத்தில் சிலநூறு பேரைகூட திரட்ட முடியலை. இதனால், அமைச்சரின் தம்பியும் அப்செட்" என்றார்கள்.
மேலும்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings