உலக சாதனை ஜல்லிக்கட்டு புதுக்கோட்டையை நோக்கி ஓடும் அமைச்சர்கள் !

0
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மாபெரும் ஜல்லிக் கட்டுப் போட்டி கின்னஸ் சாதனை முயற்சிக்காக நடத்தப்பட்டு வருகிறது. உலகப் புகழ் ஜல்லிக் கட்டாக அமையும் வகையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் நடத்தப்படும் 
உலக சாதனை ஜல்லிக்கட்டு


இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலையில் தொடங்கி வைத்தார். கின்னஸ் சாதனை முயற்சி ஜல்லிக்கட்டு’’ குறித்து தமிழகம் முழுவதும் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 

விராலிமலையில் ஆங்காங்கே `ஜல்லிக்கட்டு நாயகனே’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப் பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையில் உள்ள பட்டமரத்தான் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஜல்லிக் கட்டுப் போட்டி நடத்தப் படுவது வழக்கம்.
அமைச்சர் விஜய பாஸ்கரின் சொந்தத் தொகுதியில் நடக்கும் ஜல்லிக்கட்டு ப் போட்டி என்பதால், அனைத்து தரப்பினரிடமும் எதிர் பார்ப்புகள் அதிகம் இருக்கும். அதேபோல் அமைச்சர் தரப்பில் ஒவ்வொரு வருடமும் எவ்வித அசம்பாவிதங் களும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது வழக்கம். 

அந்த வகையில் கின்னஸ் சாதனை படைக்க விருக்கும் ஜல்லிக் கட்டானது தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தமிழகம் முழுவதும் பேசப்படும். விராலி மலையில் பிரமாண்ட ஜல்லிக் கட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி, 
உலக சாதனை ஜல்லிக்கட்டு


அது பற்றியே மக்கள் பேச வேண்டும் என்பதற்காக, `கின்னஸ் சாதனை முயற்சி ஜல்லிக்கட்டு’ என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ள தாக அரசியல் வட்டாரத்தில் பேசப் படுகிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 2,000 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் களம் இறங்குகின்றனர்
இந்த நிகழ்வை கின்னஸ் சாதனை நிகழ்வாக அங்கீகரிப் பதற்கு இங்கிலாந்தின் கின்னஸ் சாதனை ஆய்வாளர்கள் மார்க், மெலினி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழக அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ளும் இந்த போட்டியைக் கண்டுகளிக்க ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வை யாளர்கள் திரண்டு விழாவை பார்த்து ரசித்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings