யாராலும் அடக்க முடியாத அமைச்சருடைய காளை !

0
மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் வியாழக் கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. இவற்றை அடக்க முயன்ற 40 பேர் காயமடைந்தனர். அலங்கா நல்லூரில் ஜனவரி 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவ தற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில வாரங்களாக மேற்கொள் ளப்பட்டு வந்தன. 


இதை யொட்டி அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டில் பங்கேற்க 848 காளைகளும், 1400 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து வியாழக் கிழமை அதிகாலை முதலே அலங்கா நல்லூருக்கு காளைகள் கொண்டு வரப்பட்டன. 
மேலும் மாடுபிடி வீரர்களும் அங்குள்ள வாடிவாசல் பகுதியில் திரண்டனர். காலை 7 மணிக்கு அலங்கா நல்லூர் முனியாண்டி கோயில் காளை வாடிவாசலு க்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப் பட்டதும் அது அவிழ்த்து விடப்பட்டது.

வாடி வாசல் வழியாக காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. மாடு பிடி வீரர்கள் 100 பேர் கொண்ட குழுவாக களமிறக்கப் பட்டனர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளின் திமிலைப்பற்றி வீரர்கள் அடக்கினர். இதில் பல காளைகள் அவர்களிடம் சிக்காமல் களத்தை சுற்றி வந்து வீரர்களை கொம்பால் தூக்கி வீசின. 


ஜல்லிக் கட்டில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் ஒத்தக் கொம்பன், செவலை கொம்பன், வெள்ளை கொம்பன் ஆகிய 3 காளைகளும் அடுத்தடுத்து வாடிவாசல் வழியாக விடப்பட்டன. மேலும் மூன்று காளை களையும் பிடித்தால் ஏராளமான பரிசுகளும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டது. 
ஆனால் 3 காளைகளும் வீரர்களை நெருங்க விடாமல் சீறிப்பாய்ந்து சென்றன. இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான், மாணிக்கம் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ முத்து ராமலிங்கம், வீர விளையாட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகரன் ஆகியோரின் காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings