திருவாரூர் இடைத் தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித் துள்ளார்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் விருப்ப மனுக்களை அளிக்க தொடங்கி உள்ளது.
திருவாரூர் தேர்தலில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்கள் இந்த விருப்ப மனுக்களை பெற்று கட்சி தலைமையிடம் அளிக்க லாம். திமுக இந்த தேர்தலுக் காக தீவிரமாக செயலில் இறங்கி உள்ளது.
இந்த நிலையில் திமுகவிற்கு ஆதரவாக மதிமுக களமிறங்கி உள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர் களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி அளித்தார்.
அதில், 2004 தேர்தலை போல இடைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். திருவாரூர் இடைத் தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்.
திமுக நிறுத்தும் வேட்பாளருக்கு முழு ஆதரவு அளிக்கப்படும். திமுக வேட்பாளரு க்கு ஆதரவாக மதிமுக உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்வார்கள். திமுக கூட்டணிதான் இந்த தேர்தலில் வெற்றி பெறும், என்று கூறி யுள்ளார்.
ஏற்கனவே திமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது. அதே போல் கூட்டணி தர்மப்படி திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் தெரிவித் துள்ளார். இதனால் திமுகவின் பலம் அதிகம் ஆகியுள்ளது.
வரும் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும். ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments