அதிக குளிரில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி? - ஆலோசனைகள் !

0
"வெயில் காலத்துல பேஃன் போடாமா தூங்க முடியல, குளிர் காலத்துல பேஃன் ஆஃப் பண்ணா கொசுக் கடிக்குது குளிர் தாங்க முடியல" இதுதான் இப்போது அனைவரின் புலம்பலாக இருக்கிறது. தமிழகம் முழுவதுமே கடுங் குளிர் நிலவி வருகிறது. 
குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள
தமிழகத்தின் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங் களில் கூட கடும் குளிர். வால்பாறை போன்ற மலைவாசத் தலங்களில் 3.5 டிகிரி செல்சியஸ் வானிலை பதிவாகி யுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதம் வரை பனிக் காலமாக அறியப் படுகிறது. 
இந்த மூன்று மாதத்துக்கு பின்பு நாம் கடும் வெயிலையும் சந்தித்து ஆக வேண்டும். ஆனால், வெயில் காலத்தை விட நாம் நம் உடலை அதிகமாக பாதுகாத்து கொள்ள வேண்டியது பனி காலத்தில் தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.


ஏன் பனி காலத்தில் அதிக பாதுகாப்பு ?

தமிழகத்தை பொறுத்த வரை பனிக்காலம் ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும். இதனால் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். 

பனிக் காலத்தில் ஏ டிபிக்கல் வகை வைரஸ் அதிகமாக தாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் தாக்கினால் 10 முதல் 13 நாட்கள் வரை வலி நீடிக்கும். 

சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் மாற்றங்க ளால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவது தான் இதற்குக் காரணம். இந்த வைரஸ் குழந்தை களையும், வயதான வர்களையும் தான் அதிகம் தாக்குகிறது.

குளிர் காலத்தில் காய்ச்சல் வந்தால் ?

குளிர் காலத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகம் ஏற்படும். இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் காரத்தைத் தவிர்த்து விட வேண்டும். 

இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசி கஞ்சி, பிரெட் ஆகிய வற்றைச் சாப்பிடலாம். சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப்பிடலாம். 

சிட்ரிக் அமிலம் அதிக மிருக்கும் பழங்களான சாத்துக்குடி, எலுமிச்சை மற்றும் புளிப்பு மிகையாக இருக்கும் பழங்களை தவிர்க்க வேண்டும். வெயில் காலங்களில் நம் உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் இந்தப் பழங்கள், குளிர் காலங்களில் ஒத்துக் கொள்ளாது என்பதை கவனிக்க வேண்டும்.

காய்ச்சிய நீரை பருகுங்கள் !

குளிர் காலங்களில் ஜீரணி சக்தி குறைவாகவே இருக்கும். எப்போதும் போல குளிர்ந்த நீர் குடிப்பதை முற்றிலு மாக தவரிக்க வேண்டும். குளிர்ந்த நீரை குடிப்பதால் தொண்டை வலி ஏற்படும். 

அதனால் எப்போதும் வெது வெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். வெந்நீரில் துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் சளி பிடிக்காது, தொண்டை வலியும் வராது. 

அதே போல வெண்ணீரில் கொஞ்சம் ஜீரகமும் கலந்து குடிக்கலாம். கேரளாவில் பெரும்பாலும் ஜீரக தண்ணீரை குடிப்பதற்கு வழக்கமாக வைத்திருப் பார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

குழந்தைகள் எப்படி பாதுகாப்பது?

குழந்தை களுடன் வெளியே செல்லும் போது அவர்களை முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணிவிக்க வேண்டும். ஸ்வெட்டர் ஆடைகளை மாலையில் இருந்து இரவு வரை அணிவிப்பது, குழந்தை களுக்கு கதகதப்பை தரும். 
குழந்தைகள் எப்படி பாதுகாப்பது?


மேலும் குழந்தை களுக்கு இரவில் தூங்குவதற்கு முன்பு காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தைலம் தேய்த்தால் சளி பிடிக்காது. எந்த உணவாக இருந்தாலும் சுடச்சுட சாப்பிடத் தர வேண்டும். 
பனி காலத்தில் குழந்தை களுக்கு ஹோட்டல் உணவுகளை கொடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

வயதானவர் களுக்கு எப்படி ?

குளிர் காலங்கள் மற்றும் காலை நேரங்களில் சற்று பனி அதிகமாக இருக்கும் வீட்டில் பெரியாவாக்கள் இருந்தால் அவர்களுக்கு சளி, இருமல் தொந்தர வுகள் அதிகமாக இருக்கும். 

இந்த சளிப்பிரச்னை களால் தொடர்ந்து இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகள் வந்து சிரமப் படுவார்கள். எனவே வயதான வர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். 

கம்பளி ஆடைகளை இரவு நேரங்களில் அணியலாம். மாலை நேர உணவுகளான பஜ்ஜி உள்ளிட்ட வற்றை சாப்பிடக் கூடாது. குழந்தைகள் போல அவர்களும் வெதுவெதுப்பான ஜீரக நீரையே குடிக்க வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings