மாதவிலக்கால் தனி குடிசையில் தங்கிய தாய், குழந்தை பலி - நேபாளத்தில் !

0
மாதவிலக்கு நேரத்தில் தீட்டு எனக் கூறி தனி குடிசையில் தங்க வைக்கப்பட்ட பெண், அவரின் இரு குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.


நேபாளத்தில் மாதவிலக்கு நேரத்தில் பெண்களை தனி குடிசையில் தங்க வைக்கும் வழக்கம் 2017-ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டு, கிரிமினல் குற்றமாக்கப் பட்டுள்ள நிலையிலும் பல்வேறு கிராமங் களில் இந்த வழக்கம் இன்னும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

நேபாளத்தில் பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் வீட்டுக்குள் செல்ல அனுமதி கிடையாது. சவுபாதி என்று அழைக்க படும் இந்த வழக்கத்தின் படி, வீட்டுக்கு வெளியே இருக்கும் சிறிய குடிசையில் 3 நாட்களும் மாதவிலக்கு நேரத்தில் பெண் தங்கி இருந்து தங்களுக்கு வேண்டிய உணவுகளைச் சமைத்துக் கொள்ள வேண்டும். 
யாரையும் தொடக்கூடாது, புத்தகங்கள் உள்ளிட்ட எந்தப் பொருட் களையும் தொடுவதற்கு அனுமதி யில்லை. இந்த வினோத மூடப்பழக்கம் தடை செய்யப்பட்ட சூழலிலும் இது தொடர்கிறது.

நேபாளத்தின் மேற்குப் பகுதியில், பஜுரா மாவட்டத்தில் உள்ள பாட் எனும் கிராமத்தைச் சேர்ந்த அம்பா போரா (வயது 35) மாதவிலக்கு நேரத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை தனி குடிசையில் தங்கி இருந்தார். 

அப்போது அவரின் இரு குழந்தைகளும் அவருடன் தங்கி யுள்ளனர். தற்போது இமயமலைப் பகுதியில் கடும் குளிர் நிலவுவதால், குடிசைக்குள் தீமூட்டி குளிர் காய்ந்தனர்.

குடிசையில் இருந்து புகை வெளியே செல்ல இடைவெளி இல்லாத நிலையில், மூச்சுத்திணறி தாயும் அவரது இரு குழந்தை களும் உயிரிழந்தனர். இவர்கள் மூவரும் வீட்டைவிட்டு வெளியே வராத நிலையில், வீட்டுக்குள் சென்று பார்த்த போது உயிரிழந்தது தெரிய வந்தது.


இவர்கள் மூவரும் சடலமாக நேற்று அதிகாலை மீட்கப் பட்டனர். இது குறித்து போலீஸ் அதிகாரி உத்தப்சிங் கூறுகையில், “அம்பா போரா, அவரின் இரு குழந்தை களும் மூச்சுத் திணறி இறந்துள்ளனர் என்று சந்தேகப் படுகிறோம். 
சவுபாதி பழக்கத்தை அரசு தடை செய்த பின்னரும் இது தொடர்ந்து வருகிறது” எனத் தெரிவித்தார். இது குறித்து பஜுராமாவட்ட நிர்வாகத் தலைவர் சேத்ராஜ் பாரல் கூறுகை யில், “ சவுபாதி பழக்கத்தை ஒழிக்க அரசு சட்ட மியற்றிய பின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். 

மாவட்டத்தில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில், இது போன்ற சம்பவம் நட்துள்ளது, அந்தக் குடிசைகளும் ஒழிக்கப் பட்டதாகக் கூறப்பட்ட நிலையிலும் நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தர விட்டுள்ளோம் “ எனத் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings