மாணவரைக் காப்பாற்றப் போராடிய ஆசிரியர் - கதறிய பெற்றோர் !

0
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திகணேஷ். இவரின் இரண்டாவது மகன் சதீஷ் (17). இவர் சிவகாசி-ஶ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். 
இன்று காலை வழக்கம் போல வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்றுள்ளார். பின்னர் கீழே இருந்து மாடியில் உள்ள தன் வகுப்பறைக்கு நடந்து சென்ற அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவனை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித் துள்ளனர்.


மாணவர் இறந்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவனை சிவகாசி அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மாணவன் இறந்ததை அரசு மருத்துவர்கள் உறுதிப் படுத்தினர். 

இதைக் கேட்டு மாணவனின் பெற்றோர் கதறி அழுதனர். ஆசிரியர்களும் கண் கலங்கினர். மாணவன் இறப்பு குறித்து சிவகாசி நகர் காவல் நிலையத்து க்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. 

காவல் துறையினர் இறந்த மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர். மூச்சுத் திணறல் காரணமாக மாணவன் உயிரிழந் திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மேலும்
பள்ளி வளாகத் திலேயே மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இது குறித்து சிவகாசி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings