பெற்ற பிள்ளையை வெட்டி கொன்ற கொடூர தந்தை !

0
நடு இரவில் பெற்ற பிள்ளையை தந்தை ஒருவர் கண்டந் துண்டமாக வெட்டி கொலை செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.


அவர் அதே பகுதியில் கடை வைத்துள்ள ராஜேஸ்வரி என்பவரை கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்க ளுக்கு முன்புதான் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் கார்த்திகேயன், அவரது தந்தை தனபால், மனைவி ராஜேஸ்வரி மற்றும் குழந்தை என அனைவரும் தூங்கிக் கொண்டி ருந்தனர். 

அப்போது நள்ளிரவில் திடீரென எழுந்த கார்த்திகேயன் அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கத்தியால் துண்டு துண்டாக வெட்ட தொடங்கி யுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி அலறி கூச்சலிட் டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்த போது குழந்தை துண்டு துண்டாக வெட்டிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் இது குறித்து போலீசாரு க்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வானாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 


பின்னர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் அவர் சற்று மனநிலை பாதிக்கப் பட்டவர் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் குழந்தை வெட்டிக் கொலை செய்யப் பட்டதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பெற்ற தாயின் கண்முன்னே குழந்தையை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings