மருத்துவத்தில் புதிய ஆண்டிபயாடிக் - இது ஒரு புது மைல்கல் !

நீண்டநாட்களாக மிகவும் எதிர் பார்க்கப்பட்ட புது ரக ஆண்டி பயாடிக் ஒன்றை தாங்கள் கண்டு பிடித்திருப்ப தாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக் கிறார்கள்.
பாக்டீரி யாக்களை வளர்ப்பதில் அமெரிக்க விஞ்ஞானிகள் கடைபிடித்த புதிய வழிமுறைகள் 25 புதிய ஆண்டி பயாடிக் மருந்துகளை உருவாக்க உதவி யிருக்கிறது. இதில் ஒரு ஆண்டி பயாடிக் மருந்து “மிகவும் நம்பிக்கை யளிப்பதாக” விஞ்ஞானிகள் தெரிவித் திருக்கிறார்கள்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆண்டி பயாடிக் மருந்துகள் எல்லாமே ஏறக்குறைய முப்பது ஆண்டு களுக்கு முன்பு கண்டு பிடிக்கப் பட்டவை.


இந்த புதிய கண்டுபிடிப்பானது மருத்துவ உலகின் மைல்கல் என்று வர்ணிக்கப் படுகிறது. இதன் மூலம் மேலும் அதிகமான புதுரக ஆண்டி பயாடிக் மருந்து களை கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பப் படுகிறது.

1950களிலும் 1960களிலும் பல ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டு பிடிக்கப் பட்டன. ஆனால் 1987 -ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை எந்த புதிய ஆண்டி பயாடிக் மருந்தும் கண்டு பிடிக்கப்பட்டு மருத்துவர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

இதன் விளைவாக கடந்த முப்பது ஆண்டுகளில் நோயை தோற்று விக்கும் நுண்ணுயிரி கள் ஆண்டி பயாடிக் மருந்து களுக்கு தப்பி உயிர் வாழும் வகையில் தம்மை பெருமளவு தகவமைத்துக் கொள்ளத் துவங்கி விட்டன. 
உதாரணமாக மருந்து களால் குணப்படுத் தமுடியாத எலும்புறுக்கி நோய் இன்று ஏறக்குறைய இருக்கும் எந்த மருந்துக்கும் கட்டுப் படாததொரு நிலையை எட்டி யிருக்கிறது.

மீண்டும் மண்ணில் இருந்து ஆய்வு துவங்கியது

இதன் விளைவாக, எல்லாவிதமான ஆண்டி பயாடிக் மருந்து களுக்கும் மூலாதாரமான மண்ணில் இருந்து புது ரக ஆண்டி பயாடிக் மருந்துகளை கண்டு பிடிப்பதற் கான முயற்சியில் மசெஷூசெட்ஸின் போஸ்டனில் இருக்கும் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இறங் கினார்கள்.


மண்ணில் ஏராளமான நுண்ணு யிரிகள் இருந்தாலும் அவற்றில் ஒரே ஒரு சதவீதத்தைத் தான் ஆய்வகத்தில் வளர்க்க முடியும். எனவே நுண்ணு யிரிகள் இயற்கை யாக வாழும் மண்ணையே ஆய்வகமாக இந்த ஆய்வாளர்கள் மாற்றிக் கொண்டார்கள்.

இந்த ஆய்வின் முதல் கட்டமாக, பாக்டீரியாக் களுக்கான நிலத்தடி விடுதி ஒன்றை இந்த ஆய்வாளர்கள் உருவாக் கினார்கள். 
இந்த நிலத்தடி பாக்டீரியா விடுதியில் ஒவ்வொரு அறையிலும் ஒரே ஒரு பாக்டீரியத்தை வைத்து, அந்த ஒட்டுமொத்த உபகரண த்தையும் மண்ணுக்குள் புதைத்து விட்டனர்.


இந்த உபகரணம் வடிவமை க்கப்பட்ட விதம் காரணமாக இந்த பாக்டீரியங்கள் வைக்கப்பட்ட அறைகள் எல்லா வற்றிலும் மண் உள்ளே புகுந்தது. ஆனால் பாக்டீரி யங்களோ தனித்தனியாக பிரிந்தே இருந்தன.

சில நாட்களுக்குப் பிறகு இந்த பாக்டீரியங்கள் புதைக்கப் பட்ட இடத்தின் மண் தோண்டியெடுத்து ஆராயப் பட்டது.

அதில் ஒரு குறிப்பிட்ட ஆய்வாளரின் தோட்ட மண்ணில் புதைக்கப் பட்டிருந்த பாக்டீரிய த்துக்கு அந்த மண்ணில் இருந்த நுண்ணு யிரிகள் உருவாக்கிய எதிர்வினை/தடுப்பு வேதிப்பொருட் களை ஆய்வா ளர்கள் அடையாளம் கண்டனர். 

இவற்றை பரிசோதனை செய்த போது அதில் ஆண்டி பயாடிக் மருந்து தயாரிப்ப தற்கான மூலக்கூறுகள் இதில் இருப்பதை கண்டறிந் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings