திருவாரூர் இடைத்தேர்தல் களம், சூடுபிடிக்கத் தொடங்கி யுள்ளது. பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க-வும், டி.டி.வி. தினகரன் தலைமை யிலான அ.ம.மு.க-வும் வேட்பாளர் களை அறிவித்து விட்டன.
ஆனால், வேட்பாளரை மட்டும் அறிவிக்காத நிலையில் திருவாரூரைத் தன்வயப் படுத்தும் வேலைகளு க்குத் தயாராகி விட்டது, அ.தி.மு.க.
ஓ.பி.எஸ். திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை
இந்த ஆண்டின் தமிழகச் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நேரத்தில், திருவாரூர் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பியது, மத்திய அரசு.
`இருபது தொகுதி களுக்கும் சேர்த்தே தேர்தல் வரும்' என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத் தேர்தலை அறிவித்தது, மத்திய அரசு தமிழகத்தில் ஆழம் பார்க்கும் நடவடிக்கை யாகவே எதிர்க் கட்சிகள் பார்த்தன.
குறிப்பாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின் ``மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து செய்த கூட்டுச்சதி திருவாரூர் இடைத்தேர்தல்” என்று கொந்தளித் துள்ளார். காரணம், தி.மு.க-வுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தும் தேர்தலாக அமைந்து விடும் என்ற எண்ணம் அந்தக் கட்சிக்கு உள்ளது.
அதே நேரம் கருணாநிதி யின் அனுதாப அலையும், ஆளும் கட்சி மீதான அதிருப்தியும் தங்களுக்கு எதிராக அமைந்து விடுமோ என்ற அச்சத்தில் அ.தி.மு.க உள்ளது.
இந்த இரண்டு கட்சி களையும் கடந்து, கடந்த இரண்டு மாதங்க ளாகத் திருவாரூர் தொகுதியில் தேர்தல் வேலை பார்த்து வரும் தினகரன் தலைமை யிலான அ.ம.மு.க. கட்சியினர் வெற்றி பெறாவிட்டா லும்
இரண்டாவது இடத்தைப் பிடித்தாலே தமி்ழகத்தில் நாங்கள் தவிர்க்க முடியாத சக்தி என்று நிரூபிக்கும் மனநிலையில் உள்ளார்கள். இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது.
அமைச்சர் காமராஜ் பொறுப்பில் இந்த மாவட்டம் இருப்பதால், அவரிடம் முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
அ.தி.மு.க தரப்பில் கலிய பெருமாள் அல்லது கடந்த முறை கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட பன்னீர் செல்வத்தை நிறுத்தலாம் என்கிற பேச்சு நிலவி வருகிறது.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் ஆர்.கே.நகர்த் தொகுதியை ஆளும் கட்சியாக இருந்தே கோட்டை விட்டது போல, கருணாநிதி யின் தொகுதியை யும் கோட்டை விட்டு விடக் கூடாது என்கிற எண்ணம் அ.தி.மு.க-வில் பலமாக உள்ளது.
ஆர்.கே.நகரில் ஆளும் கட்சி என்ற அதீத மனோபாவத் தினால் தான் தோல்வியைச் சந்தித்து, அ.தி.மு.க. ஆனால், தினகரன் திட்டமிட்டு ஆர்.கே.நகரில் களத்தில் இறங்கிப் பணியாற்றிய தால் தி.மு.க -வை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி வெற்றிபெற்றார்.
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தினகரன்
திருவாரூர் இடைத்தேர்தலில் தினகரன் பாணியைக் கையில் எடுக்க முடிவு செய்துள்ளது, அ.தி.மு.க. கடந்த வியாழக்கிழமை அன்று மாலை துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் அறையில் இருபது அமைச்சர்கள் கலந்து கொண்ட ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருவாரூர் தேர்தல் வியூகம் குறித்து பேசப்பட் டுள்ளது. ஒவ்வோர் அமைச்சரிடமும் தனித்தனி யாகக் கருத்துகளைக் கேட்டுள்ளார், பன்னீர் செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து பேசும் அ.தி.மு.க -வினர், ``திருவாரூர் தேர்தலில் தி.மு.க-வும் பலமாகக் களத்தில் இறங்கும்.
ஏற்கெனவே தேர்தல் பணிகளை முடக்கி விட்டுள்ள தினகரனும் மல்லுக் கட்டுவார் என்பதை அமைச்சர்கள் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளனர். எனவே, பூத் அளவில் ஆட்களை வலுப்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
ஒவ்வோர் அமைச்சருக்கும் ஐந்து பூத்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. தலா ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு எம்.எல்.ஏ., அவர்களு க்குக் கீழ் கட்சி நிர்வாகிகள், லோக்கல் கட்சிக் காரர்கள் எனத் திட்டமிட்ட வகையில் வியூகங்கள் வகுக்கப் பட்டுள்ளன.
தி மு கவை திருவாரூரில் இருந்து விரட்டுங்கள்
அதேபோல், வாக்காளர் களைக் குளிர் விக்கும் விதத்தில் கரன்சி களைக் களத்தில் இறக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. தினகரன் பாணியில் வாக்குகேட்க வரும் அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள் சொன்னதற்குப் பன்னீரும் ஓ.கே. சொல்லி யுள்ளார்.
இந்தத் தேர்தலின் முடிவைப் பொறுத்தே வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு இருக்கும் என்பதால், பி.ஜே.பி தரப்பு அ.தி.மு.க-வின் அதிகார துஷ்பிரயோக த்தைப் பெரிதாகக் கண்டு கொள்ளாது என்று ஆளும் தரப்பில் நினைக் கிறார்கள்.
தி.மு.க எந்த அளவுக்குத் தேர்தல் வேலையில் ஈடுபடுமோ, அந்த அளவுக்குத் தினகரன் தரப்பும் களத்தில் நிற்கும் என்பதால் தான் வேட்பாளர் தேர்வு செய்வதைத் தள்ளிப் போட்டதற்கு காரணம்” என்கிறார்கள்.
திருவாரூர் தேர்தலை வைத்து தி.மு.க-வை ஆட்டம் காண வைக்கும் மூடில் திருவாரூர் ஆபரேஷனைக் கையில் எடுக்கப் பார்க்கிறது அ.தி.மு.க.
Thanks for Your Comments