ரஜினி கட்சியில் ரங்கராஜ் பாண்டே சேரப் போகிறார் என்றொரு தகவல் கசிந்து வருகிறது. இதுகுறித்து ரஜினி யிடமும் கேட்கப் பட்டது.
பிரபல தனியார் செய்திச் சேனலில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் ரங்கராஜ் பாண்டே. இவரின் நிகழ்ச்சி களில், கேள்விகளை மடக்கி மடக்கிக் கேட்பதில் சம்பந்தப் பட்ட பிரமுகரே ஒருநிமிடம் திணறித்தான் போவார்.
சில தருணங்களில், கேள்விகளின் உஷ்ணம் தாங்காமல், அல்லது தர்மசங்கடப் பட்டு பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு போனவர் களும் உண்டு.
இந்த நிலையில், ரங்கராஜ் பாண்டே அவர் வேலை பார்க்கும் நியூஸ் சேனலில் இருந்து விலகி விட்டதாக தகவல் பரவியது.
இதை யடுத்து ’ஆமாம்… நான் விலகி விட்டேன்’ என்று பாண்டேவே ஒரு வீடியோ பேச்சை வெளியிட்டார்.
இப்போது, இரண்டு டாபிக்குகள் தமிழக அரசியலில் பிரேக்கிங் நியூஸாகி பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. ஒன்று…
அமமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜி திமுகவில் சேரப் போகிறார் எனும் செய்தி. அதிமுக மற்றும் அமமுக வட்டாரத்தில் இது தான் இப்போது ஹாட் டாபிக்.
இதேபோல் இன்னொரு தீயாய் பரவி வரும் சேதி… ரங்கராஜ் பாண்டே, ரஜினியின் கட்சிக்கு ஆலோசகராக அவரது கட்சியில் சேரப்போகிறார் என்று வேகமாகப் பரவி வருகிறது.
இந்த நிலையில், ரஜினியை சந்தித்த செய்தி யாளர்கள், ‘ரங்கராஜ் பாண்டே உங்கள் கட்சியில் சேரப் போகிறார் என்று சொல்லப் படுகிறதே’ என்று அவரிடம் கேட்டார்கள்.
உடனே ரஜினி, ‘அப்படி யெல்லாம் இல்லீங்க. அது வதந்தி’ என்று சட்டென்று அந்தக் கேள்விக்கு பதில் சொல்லி முற்றுப் புள்ளி வைத்தார்.
Thanks for Your Comments