சென்னை ராஜிவ்காந்தி மருத்துவ மனையில் மருத்துவர் என கூறி நோயாளி களிடம் பணம் பறித்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஸ்கேன் எடுக்க 800 ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக அங்கு பாதுகாப்பில் இருந்த காவலரிடம் நோயாளி முறையிட் டுள்ளார்.
அப்போது தன்னை ஏமாற்றிய பெண்ணை பார்த்த நோயாளி காவலரிடம் அடையாளம் காட்டினார்.
இதனையடுத்து அந்த பெண்ணை விசாரித்ததில் திருத்தனையை சேர்ந்த ஷர்மிளா என்பதும் அவர் உண்மையான மருத்துவர் இல்லை என்பதும் தெரிய வந்தது.
பின்பு அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை, ஸ்டெதஸ்க்கோப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்த போலீசார் ஷர்மிளாவையும் கைது செய்தனர்.
Thanks for Your Comments