மூதாட்டியை தாக்கி நகை பறிக்கப்பட்ட விவகாரத்தில் கொள்ளையர் களை கைது செய்ய தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. குன்றத்தூரில் கணவருடன் நடந்து சென்ற மூதாட்டியிடம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பைக்கில் வந்த இளைஞர்கள் செயினை பறித்துச் சென்றனர்.
நகையை மீட்க சம்பந்தப்பட்ட மூதாட்டி போராடிய போது, அவரை சாலையில் தரதர வென இழுத்துச் சென்றனர். அங் குள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது.
அதே மாதத்தில் கோயம் பேடு காவல் நிலைய எல்லைக்கு உட் பட்ட பகுதியில் மேனகா என்ற பெண் ணின் செயினை கொள்ளை யர்கள் இதே பாணியில் பறித்துச் சென்றனர்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங் களில் வைரலாக பரவியது. இப்படி கடந்த ஆண்டு மட்டும் 500-க்கும் மேற்பட்டோரின் நகைகள் பறிக்கப் பட்டன.
இந்நிலையில் சென்னையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் விஜய லட்சுமி(64).
இவர், சென்னை நங்க நல்லூர் ஸ்டேட் வங்கி காலனியில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்தார்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்ததும், விஜயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 9 சபவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித் தார். பின்னர் பைக்கில் வந்த தனது கூட்டாளியுடன் மின்னல் வேகத்தில் தப்பினார்.
விஜயலட்சுமி சுதாரிப்ப தற்குள் செயின் பறிப்பு கொள்ளையன் கூட்டாளியுடன் தலைமறை வானார். இதைத் தொடர்ந்து விஜயலட்சுமி பழவந்தாங்கல் காவல் நிலையத் தில் புகார் தெரிவித்தார்.
குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். உடனடியாக சம்பவ இடம் சென்று அங்குள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப் போது, விஜயலட்சுமியை வழிப்பறி கொள்ளையன் தள்ளி விட்டு நகையை பறித்துச் சென்றது தெளி வாக தெரிந்தது.
அதை அடிப்படை யாக வைத்து தனிப்படை போலீஸார் தற்போது நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளை யனையும், அவனது கூட்டாளியை யும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
முதல் கட்டமாக கொள்ளையர் களை கைது செய்ய தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அனைத்தும் சென்னை யில் உள்ள அனைத்து காவல் நிலை யங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட் டுள்ளன.
கொள்ளை யர்கள் மூதாட் டிகளை குறிவைத்து கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அதிர்வலை களை ஏற்படுத்தி உள்ளது. கொள் ளையர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Thanks for Your Comments