சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் பணிபுரியும் டாக்டர்கள், பெண் ஒப்பந்த ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட சேலை வாங்கிக் கொடுத்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் 325 பெண் ஒப்பந்த ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த ஊழியர்க ளுக்கு இலவசமாக சேலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மருத்துவமனை தொடர்பு அதிகாரி டாக்டர் ஆனந்த் குமார் தலைமையில் டாக்டர்கள், செவிலி யர்கள் ஊழியர் களுக்கு சேலை வழங்கினர். சேலையை பெற்றுக் கொண்ட சிலர் கண் கலங்கினர்.
பொங்கள் பண்டிகை க்குக் கூட புதிய ஆடைகள் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால், மருத்துவமனையில் பணிபுரியும் சக டாக்டர்களுடன் கலந்தாலோசித்து ஊழியர்க ளுக்கு புதிய ஆடைகள் வழங்க முடிவு செய்யப் பட்டது.
அதன்படி, அதன்படி சுமார் ரூ.1 லட்சம் நிதி திரட்டி 325 சேலைகள் வாங்கி கொடுத்திரு க்கிறோம்” என்றார்.
அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் பணி புரியும் பெண் ஒப்பந்த ஊழியர்கள் பொங் கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட டாக்டர்கள் சேலை வாங்கி கொடுத்தி ருக்கும் நிகழ்வு, மற்ற அரசு மருத்துவ மனைகளில் பணிபுரியும் டாக்டர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Thanks for Your Comments