தடையில்லா மின்சாரம் வழங்க உயர் மின் கோபுரம் திட்டம் - தங்கமணி விளக்கம் !

0
தமிழகத்தில் தடையில்லா மின் சாரம் வழங்கவே உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டம் செயல் படுத்தப் படுகிறது என்று சட்டப் பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக் கும் பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றனர். 

போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப் பட்டனர். இது தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 


தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப் படுவதால், அப்பகுதிகளில் விவசாயிகள் 7 மாதங்களாக போராடி வருகின்றனர்.
40-க்கு 90 மீட்டர் அகலத்தில் மின் பாதை அமைப்பதால் ஓரிரு ஏக்கர்கள் வைத்துள்ள விவசாயி கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி யுள்ளனர். இது தொடர்பாக போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். 

எனவே, அந்த பணிகளை உடனடி யாக நிறுத்தி, விவசாயிகளை அழைத்துப் பேசி, மின்சாரத்தை கேபிள் வழியாக கொண்டு செல்லும் திட்டத்தை அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் பிரின்ஸ், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு ஆகியோர் இது தொடர்பாக வலியு றுத்தினர்.

இதற்கு பதில் அளித்து அமைச் சர் பி.தங்கமணி பேசியதாவது:

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகத்து க்கு 4 ஆயிரம் மெகாவாட், கேரளாவுக்கு 2 ஆயிரம் மெகாவாட் என 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொண்டுவர இந்த மின் கோபுரங்கள் அமைக் கப்படு கின்றன.
சத்தீஸ்கரில் இருந்து கேரளா வரை 1,766 கி.மீ. தூரத்துக்கு மின் கோபுரங்கள் அமைக்கப்படு கின்றன. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா வில் பணி கள் முடிந்துள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் பணிகள் நடக்கின்றன. 

உலகில் எந்த நாட் டிலும் 800 கிலோவாட் மின் சாரத்தை கொண்டு செல்லும் கேபிள்கள் இல்லை. அதற்கான தொழில் நுட்பமும் இல்லை. இருந் திருந்தால் விவசாயிகளை பாதிக் காமல் அதை பயன்படுத் தியிருப்போம்.
கோவையில் இருந்து கேரளாவுக்கு 2 ஆயிரம் மெகாவாட் பிரித்து அனுப்பப் படுகிறது. அவர்கள் 320 கிலோ வாட்டாக பிரித்து கேபிள் வழியாக வனம் மற்றும் கொச்சி நகர் வழியாக 29 கி.மீ. அளவுக்கு மட்டுமே கொண்டு செல்கின்றனர். 


அங்கும் 183 மின் கோபுரங்கள் அமைக்கப் படுகின்றன. முதலில் இதை எதிர்த்த கேரள கம்யூனிஸ்ட் அரசு தற்போது இத்திட்டத்தை செயல் படுத்துகிறது. 

அதே நேரம் 4 ஆயிரம் மெகாவாட்டை பிரித்து கேபிள் வழியாக கொண்டு செல்வது சாத்தியம் இல்லை. மரங்கள், நிலத்துக்கு அந்தந்த பகுதிக்கேற்ப இழப்பீடு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கவே இந்த திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதை செயல் படுத்தாமல் தடுத்தால், தமிழகத்துக்குத் தான் நஷ்டம்.
ஒரு கி.மீ.க்கு சுமார் ரூ.9 கோடி என இத்திட்டத்துக்கு ரூ.24 ஆயிரம் கோடி செலவிடப் படுகிறது. இதை புதை வடமாக மாற்றினால் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி செலவாகும். நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளோம். 

விவசாயி களிடம் மக்கள் பிரதிநிதிகள் பேசி, உண்மையை விளக்கிக் கூறி திட்டத்தை செயல் படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings