சின்னக் கவனக்குறைவு தான் – சில சமயங்களில் பெரிய சிக்கலில் தள்ளி விடும். கார் வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயம் நிச்சயம் பொருந்தும்.
இதில் ரொம்ப முக்கியமான விஷயம் – ஃப்யூல் ஸ்வாப்பிங். (Fuel Swapping). அதாவது, பெட்ரோல் காரில் டீசலையோ அல்லது டீசல் காரில் பெட்ரோலையோ நிரப்பி விடுவது.
இது எப்போதாவது தெரியாமல் நடக்கும் விஷயம் தான் – ஆனால், நடக்கக் கூடாத விஷயம்.
நூறில் கிட்டத்தட்ட ஐந்து பேருக்கு இந்த மாதிரி ஓர் அனுபவம் நிகழ்ந்தி ருக்கும். இப்படிப்பட்ட சூழலில் என்ன நடக்கும்? என்ன செய்ய வேண்டும்?
பெட்ரோலு க்கும் டீசலுக்கும் என்ன வித்தியாசம்?
டீசல் – பெட்ரோல் இரண்டுமே எரிபொருள்கள் தாம். இரண்டுமே க்ரூடு அல்லது மினரல் ஆயிலில் தான் தயாரிக்கப் படுகின்றன என்றாலும், டீசலும் பெட்ரோலும் வெவ்வேறு குணநலன்கள் கொண்டவை.
உதாரணத் துக்கு, பெட்ரோல் மேல்தளத்தில் எரியும் தன்மை கொண்டது. இதுவே டீசல் மேலோட்ட மாக எரியாது. உதாரணத்துக்கு, டீசலின் மேலே ஒரு தீக்குச்சியை உரசி வைத்தால் கூட எரியாது.
இது இன்டர்னெலாக வெடிக்கும் தன்மை கொண்டது. பெட்ரோலின் மேலே லேசாக தீப்பொறி பட்டாலே வெடிக்கும் எரிபொருள். இதன் அடர்த்தியும் கொதி நிலையும் தான் இதற்குக் காரணம்.
டீசல் – ஹைட்… வெயிட் பார்ட்டி. அதாவது அடர்த்தி அதிகம். பெட்ரோல் – உலக அழகிகள் மாதிரி சைஸ் ஸீரோ ஷேப். அடர்த்தி குறைவானது.
பெட்ரோல் 40 டிகிரி செல்சியஸி லிருந்து 205 டிகிரி வரை கொதி நிலைத் தன்மை கொண்டது. டீசல் – 250 டிகிரி முதல் 350 டிகிரி செல்சியஸ் வரை பாயிலிங் டெம்பரேச்சர் கொண்டது.
பெட்ரோல் இன்ஜினில் ஸ்பார்க் பிளக் இருக்கும். ஸ்பார்க் பிளக்கின் வேலை, தீப்பொறியை ஏற்படுத்தி இன்ஜினை இயக்கச் செய்வது.
இது ஏற்படுத்தும் தீப்பொறியால், பெட்ரோலும் காற்றும் கலந்த கலவை எரியூட்டப்படும்போது, பெட்ரோல் இன்ஜினின் பிஸ்டன் இயங்கி வாகனம் நகரும்.
இதுவே டீசல் இன்ஜினில் ஸ்பார்க் பிளக் இருக்காது. இன்ஜெக்டர் தான் இங்கே கிங்!
சிலிண்டரில் இருக்கும் காற்று அழுத்தப்படுவதால் ஏற்படும் வெப்பத்தின் போது, இந்த இன்ஜெக்டர் எரிபொருளை ஸ்ப்ரே செய்யும். இதன் மூலம் தான் டீசல் இன்ஜினில் கம்பஸன் நடக்கிறது.
`அக்னி நட்சத்திரம்’ பிரபு – கார்த்திக் மாதிரி இரண்டும் எதிரி புதிரி தன்மை களைக் கொண்டிருக்கும் போது, இரண்டையும் ஒன்று சேர்ப்பது இங்கே சாத்தியமே இல்லை.
என்ன நடக்கும்?
முதலிலேயே சொன்னது போல், இது எப்போதாவது நடக்கும் விஷயம் தான். காரணம், பெட்ரோல் – டீசல் இரண்டின் நாஸில் குழாய்களே அளவில் வித்தியாசப் படும்.
டீசல் கன், அளவில் கொஞ்சம் பெரியது. அதனால், இது சாதாரணமாக பெட்ரோல் டேங்க்கின் வாய்ப்ப குதியில் நுழையாது.
எனவே, பம்ப் ஊழியர்கள் கஷ்டப்பட்டு நாஸிலை உள்ளே தள்ளும்போதே எச்சரித்து விடலாம். இதுவே டீசல் இன்ஜினுக்குள் பெட்ரோலை நிரப்புவது அடிக்கடி நடக்கும் விஷயம்.
டீசல் இன்ஜின் கொண்ட காரின் டீசல் டேங்க், அளவில் பெரியதாக இருக்கும். எனவே, பெட்ரோல் கன்னின் நாஸில் எளிதில் உள்ளே நுழைந்து விடும்.
இப்போதுள்ள CRDi டீசல் இன்ஜின்கள், அதிக அழுத்தத்தில் இயங்கக் கூடியவை.
டீசலை விட தடாலென எளிதில் தீப்பிடிக்கும் பெட்ரோல், உள்ளே இருக்கும் மிச்ச மீதி டீசலில் சேரும் போது, அதிக அழுத்தத்தால் இன்ஜின் பிஸ்டன்கள் தேய்ந்து தேவானையாகி விடும்.
டீசல், மிகச் சிறந்த லூப்ரிகன்ட். அதாவது, ஆயில்போல மசகுத் தன்மை கொண்டது. தடிமனான டீசலுடன் ஒல்லியான பெட்ரோல் இணையும் போது,
மசகுத்தன்மை குழம்பி என்ன செய்வ தென்றே தெரியாமல் மசகுத் தன்மையை இழந்து, மசமசவென டீசல் முழிக்க ஆரம்பிக்கும்.
இப்போது இன்ஜினின் உராய்வுத் தன்மை அதிகரித்து, இன்ஜின் மொத்தமாக கதம் கதம்!
பெட்ரோல் இன்ஜினில் டீசலைச் செலுத்தும் போது என்னாகும்? ஒல்லியான பெட்ரோலுடன் டீசல் விழுகும் போது, இரண்டும் ஒன்றோடு ஒன்று கலக்காது.
நீங்கள் காரை ஸ்டார்ட் செய்யும் போது, ஸ்பார்க் பிளக்குகள் டீசலை எரிக்க முடியாமல், தீப்பொறி கிளப்ப முடியாமல், மாரத்தான் வீரர் போல் மூச்சு வாங்கும்.
இன்ஜின் ஸ்டார்ட் ஆகத் திணறும். நடுவழியிலேயே கார் நிற்கும்? அப்புறம் என்ன? இன்ஜினுக்குப் பெரிய ஆப்பு ரெடி!
என்ன செய்ய வேண்டும்?
கார் வெள்ளத்தில் மூழ்கினா லும் சரி; பெட்ரோல் டீசலை மாற்றி ஊற்றினாலும் சரி – தவற்றை உணர்ந்த அடுத்த நொடியில் கார் சாவியை ஒளித்து வைத்து விடுவது நல்லது.
அதாவது, எந்தச் சூழ்நிலையிலும் ஸ்டார்ட் பண்ணாமல் இருப்பதே காருக்குச் செய்யும் மிகப் பெரிய நன்மை.
காரை சேஃப்டி யான ஓர் இடத்துக்குத் தள்ளிச் சென்று, எரிபொருள் முழுவதையும் டிரெயின் செய்து காலி பண்ணுவதே உகந்தது.
அதற்குப் பிறகு சரியான எரிபொருள் நிரப்பிப் பயணிக்கலாம். அதையும் மீறி ஸ்டார்ட் செய்துவிட்டு, தாமதமாக உணரும் பட்சத்தில் இது தான் ஒரே வழி.
இப்போதுள்ள மாடர்ன் கார்களில், நீங்கள் ஸ்டார்ட் செய்த அடுத்த விநாடி, இன்ஜினின் இண்டு இடுக்குகளில் கூட எரிபொருள் சர்க்குலேட் ஆகி விடும்.
உடனே இன்ஜினை ஆஃப் செய்யுங்கள். பணம் போச்சே என்று நினைக்காமல் காரை `டோ’ பண்ணி சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு சென்று,
எரிபொருள் அத்தனையையும் டிரெயின் செய்யாத பட்சத்தில் வடை போச்சே என்று புலம்ப நேரிடும்.
பெட்ரோல் போடும் போது இதெல்லாம் கவனிங்க!
டேங்க் ஃபில் பண்ணுங்க என்று சொல்லி விட்டு, காரை விட்டிறங் காமலே மொபைலை நோண்டி விட்டு, தப்பான எரிபொருள் நிரப்பிய பிறகு புலம்புவதைத் தவிர்க்க சில ஐடியாக்கள்.
பெட்ரோல் பங்க்கில் நுழையும் போதே, காரை பெட்ரோல் / டீசலுக்கான சரியான லேனில் செலுத்துங்கள்.
எரிபொருள் நிரப்பும்போது, தயவு செய்து காரை விட்டிறங்கி எரிபொருள் அளவையும், `டீசல், பெட்ரோல்’ என்று ஊழியரிடம் உறுதி செய்த பிறகு நாஸிலை உள்ளே விடச் சொல்லுங்கள்.
எப்போதும் ஜீரோ செக் செய்யத் தவறாதீர்கள். ஆயிரம் ரூபாயா… சாரி சார்… எனக்கு 300-னு கேட்டுச்சு’ என்று சில ஊழியர்கள் வேண்டு மென்றே தொகையைக் குறைவாக செட் செய்து விடுவார்கள்.
திரும்ப ஜீரோ செட் செய்யாமல், அதிலிருந்தே ரூ.700-க்கு செட் செய்து விட்டு, ஃபர்ஸ்ட் 300 + இப்போ 700 = 1,000. ஓகேவா சார் என்று கணிதப் புலிகளாகி பெட்ரோல் நிரப்பி விடுவார்கள்.
உங்களுக்கு 300 ரூபாய் நாமம்! இது பைக் பார்ட்டிகளுக்கும் பொருந்தும். பெட்ரோல் காரின் டேங்க்கைவிட, டீசல் கன் நாஸில் அளவில் பெரியது என்பதால், எளிதில் உள்ளே நுழையாது.
பம்ப் ஊழியர்கள், கஷ்டப்பட்டு நாஸிலை உள்ளே தள்ளினால் பெட்ரோல் கார் பார்ட்டிகள் உடனே உஷாராகுங்கள்.
பெட்ரோல் போடும் போது காரை ஐடிலிங்கில் விடாதீர்கள். இன்ஜினை ஆஃப் செய்து விட்டு எரிபொருள் நிரப்புவது பேராபத்தைத் தடுக்கும்.
பெட்ரோல் பங்க்குகளில் போனை நோண்டுவது, போனை அட்டெண்ட் செய்வது அறவே கூடாது.
குழந்தைகளை அருகாமையில் வைத்து எரிபொருள் நிரப்புவது ரொம்பத் தப்பு. சிலர் புனல் பயன்படுத்தி எரிபொருள் நிரப்புவார்கள். இதுவும் தப்பு. இதன் மூலமும் ஃப்யூல் ஸ்வாப்பிங் ஏற்படலாம்.
முடிந்தளவு ஒரே பங்க்கில் எரி பொருள் நிரப்புவதைப் பழக்க மாக்குங்கள். கார்களைப் பற்றி நன்கு தெரிந்த பம்ப் ஊழியர்கள் இப்போது ரொம்பவும் குறைவு.
உதாரணத்துக்கு, மஹிந்திராவில் KUV காரைத் தவிர பெட்ரோல் வாகனங்களே கிடையாது.
க்விட், இயான், ஆல்ட்டோ, ஆம்னி, வேகன்-ஆர், டட்ஸன், பிரியோ போன்ற கார்களில் டீசலே கிடையாது. இது ஊழியர் களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மேலும்
எனவே, பெட்ரோல் / டீசல் கார்களை மாற்றி மாற்றி ஓட்டும் தனவான்கள், கார்களில் ஸ்டிக்கரை ஒட்டி விட்டால் பிரச்னையே இல்லை.