கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கனிம வள கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்டா மார்க்கெட் அருகே சாலை யோரத்தில் சந்தேகத் திற்கு இடமான வகையில் நிறுத்தி யிருந்த இரண்டு லாரிகளை சோதனை யிட்டனர்.
லாரிகளில் இருந்த மணல் குறித்து, லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தினர்.இதில் இரு ஓட்டுநர்களும் முன்னுக்குப் பின் முரணான தகவல் களை கூறியதை யடுத்து, ஆவணங்களை சோதனை செய்தனர்.
து, நாகர்கோவில் என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் குறைந்த விலைக்கு அரியலூர் அரசு மணல் குவாரியில் மணலை வாங்கி,வரும் வழியில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
பின்னர் விராலிமலை பகுதியில் இருந்து முறைகேடாக மணலை ஏற்றி, அதனை ஆன் லைன் மூலம் பெறப்பட்ட ரசீது மூலம் கன்னியாகுமரி கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது.
இதை யடுத்து லாரி ஓட்டுநர்களான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, சரவணன் ஆகிய இருவரை கைது செய்த வடசேரி காவல் துறையினர், இருவரிடம் தீவிரவிசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து, அரசு குவாரியில் இருந்து வாங்கப்படும் மணலை அதிக விலைக்கு விற்று விட்டு, மீண்டும் அதே பதிவுச் சீட்டின் மூலம் திருட்டுத் தனமாக வாங்கும் மணலை அதிக விலைக்கு பேரம் பேசி விற்று வந்ததாக காவல் துறையினரிடம் தெரிவித் துள்ளனர்.
இதை யடுத்து 4 டன் மணலுடன் இருந்த இரண்டு டாரஸ் லாரிகளை யும் பறிமுதல் செய்த காவல் துறையினர், தொடர்ந்து ஓட்டுநர்கள் இருவரிடம் விசாரிக்கின்றனர்.
Thanks for Your Comments