சீனா தயாரித்திருக்கும் ராட்சத குண்டு - வெடி குண்டுகளின் தாய் !

0
அமெரிக்கா உருவாக்கிய ’அனைத்து வெடி குண்டுகளின் தாய்’ குண்டுக்கு போட்டியாக சீனா அணு ஆயுதம் இல்லாத ராட்சத குண்டு ஒன்றை தயாரித் துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெலியிட் டுள்ளன.


இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”சீனா உலகிலேயே மிகப் பெரிய வெடிகுண்டை உருவாக்கி யுள்ளது. 

சீனாவின் பாதுகாப்புத் துறை இது தொடர்பான தகவலை வெளியிட் டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.

சீனா உருவாகி இருக்கும் இந்த ராட்சத குண்டு மாபெரும் வெடிப்பை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. இது தொடர்பான வீடியோவை சீன அரசு டிசம்பர் இறுதி வாரத்தில் தனது இணைய தளத்தில் வெளி யிட்டுள்ளது.” என்று செய்தி வெளி யிட்டுள்ளது.

முதல் முறையாக ராட்சத குண்டு பற்றிய தகவலை சீனா வெளியிட் டுள்ளதாக சீன அரசு ஊடகமான சினுவாவும் செய்தி வெளி யிட்டுள்ளது.

முன்னதாக 2017 ஆண்டு ஐஎஸ் தீவிரவாதி களை குறி வைத்து அமெரிக்கா வீசிய ஜிபியு-43/பி என்ற வெடிகுண்டு ‘அனைத்து வெடி குண்டுகளின் தாய் (எம்ஓஏபி)’ என்று அழைக்கப் பட்டது. 

இந்த குண்டு மலைக் குகைகள், சுரங்கங்கள் மற்றும் பரந்த நிலப் பகுதியை அழிப்பதற் காக இது உருவாக்கப் பட்டது.

9 மீட்டர் நீளமும் 1 மீட்டர் விட்டமும் 9,800 கிலோ எடையும் கொண்ட இந்த வெடி குண்டு ஜிபிஎஸ் கருவி வழிகாட்டு தலுடன் சென்று இலக்கை தாக்க வல்லது. 


11 டன் வெடிபொருள் ஏற்படுத்தும் நாசத்துக்கு இணையான அழிவை ஏற்படுத்தக் கூடியது. அமெரிக்க ராணுவத்தின் அணு ஆயுதம் அல்லாத வெடிகுண்டில் இதுவே மிகப் பெரியதாகும்.

ஈராக் போரில் பயன்படுத்து வதற்காக சுமார் ரூ.103 கோடி செல வில் இந்த வெடிகுண்டு உருவாக்கப் பட்டது. 2003-ல் இது சோதித்துப் பார்க்கப் பட்டது என்றாலும் 2017 ஆம் ஆண்டுத் தான் இந்த குண்டு பயன்படுத்தப் பட்டது.

இந்த நிலையில் இதற்கு போட்டியாக சீனா மற்றுமொரு ’அனைத்து வெடி குண்டுகளின் தாய்’ வெடி குண்டைத் தற்போது தயாரித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings