மண் பானை என்றால் நினைவுக்கு வருவது பொங்கல் - பானை இல்லாமல் பொங்கலா?

0
தமிழகத்தில் பானை என்றால் நம் நினைவுக்கு வருவது பொங்கல் பானை தான். இவை மண்ணினா் செய்யப் படுவதால் மண்பாண்டம் என்றும் கூறப்படுகிறது. 
மண் பானை என்றால் நினைவுக்கு வருவது பொங்கல்
மிகப் பழங்காலத் தில் இருந்து மட்பாண்டங்கள் செய்து வருகின்றனர். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளு க்கு முன்பே மனிதர்கள் களி மண்ணால் பாத்திரங்கள் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

அகழ்வாராட்சி துறையில் ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்த பல வகையான மண் பானைகள், களிமண் ஜாடிகள் சாட்சியம். 

மண் பாண்டங்கள் செய்வது உலகின் பல பகுதிகளிலும் மிகவும் பழமை வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது. 

இத்தொழில் தமிழில் குயத்தொழில் என்று கூறப்பட்டது. காலப் போக்கில் மட்பாண்டம் செய்பவர் களை குயவர் என்று அழைக்கப் படுகின்றனர். 

ஆமாம் தமிழகத்தில் செய்யும் மண் பாண்டங்கள் எப்படி இவ்வளவு தத்தூரபமாக அழகிய கலை வண்ணத்தில் செய்கின்றனர் என்று நீங்கள் நினைக்கலாம். வாங்க பார்க்கலாம்…
நீர், மற்றும் மண் சேர்த்துக் குழைக்கப் பட்ட களிமண் 2 நாட்களுக்கு ஊர வைக்க படுகின்றன. பின்னர் மறுபடியும் தேவையான அளவு மண்ணோடு குழப்பப் படுகின்றது. 

களிமண் அச்சில் கைகளால் வார்த்தெடுத்து தேவையான அளவிற்க்கு பானையை வடிவமைத்து வெயிளில் ஒருநாள் முழுவதும் காய வைக்க வேண்டும். 

மறு நாள் கிட்டதட்ட 500 பானைகளை ஒரே அடுப்பில் வைத்து நெருப்பில் ஏறக்குறைய 5 மணி நேரம் 850 சென்டி கிரேட் சூட்டில் பானையை வேக வைக்க வேண்டும்.
பானை இல்லாமல் பொங்கலா?
இவ்வாறு சூடாக்குவதன் மூலம், களிமண் இறுகுதல், பலம் கூடுதல், வடிவம் உறுதியாதல் போன்ற நிரந்தரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

அதிக அளவு சூடு ஆகாமலும் பாத்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அதிக சூடானால் பானை வெடித்து விடும். 

ஆகையால் கவனமாக இருக்க வேண்டும். பானையை வடிவமை க்கும் முறையை நுட்பமாக கையாள வேண்டும். 

சூடான பானையை எடுத்து காற்றோட்ட மாக வைத்த பின் சாயம் மற்றும் வர்ண ஓவியங்கள் தீட்டி விற்பனைக்கு எடுத்துச் செல்லப் படுகிறது.

தமிழகத்தில் தயாரிக்கப் படும் மண் பாண்டங்கள், பானை, மண்சட்டி, அகல் விளக்கு, நெய் விளக்கு, மோட்ச விளக்கு, தூபக்கல், 

கல்யாண பானை, தண்ணீர் பானை, லிங்கம் போன்ற பல வகைகளில் தயாரிக்கப் படுகின்றன. பானை ஒரு இசை கருவி யாகவும் பயன்படுகிறது. 

பொங்கல் பண்டிகை என்றாலே, தமிழகத்தில் ஆண்டு தோறும் மக்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை யின் போது, மண் பானையில் பொங்கலிடுவது வழக்கம். 

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இத்தொழில் செய்யப் படுகிறது. 

பொங்கல் விற்பனைக் காக மண் பானைகள் தயாரிப்பில் மண்பாண்ட தொழிலா ளர்கள் ஈடுபடு கின்றனர். 

பொங்கல் திருநாளில் மண் பானையில் பொங்கல் வைப்பதை இன்றவும் பலர் பின்பற்றி வருகின்றனர். 

குக்கர் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கல் வைப்பதை தவிர்த்து மக்கள் மண் பானைகளில் பொங்கல் வைத்தால் பொங்கல் சுவையாக ருசியாக இருக்கும் என்றும், 
மண் பானை பொங்கல்
தங்களின் வாழ்க்கையில் ஆண்டு தோறும் தை பிறந்தாலும் வழி பிறக்காமல் கடந்த 40 ஆண்டு காலமாக இந்தவித மண்பாண்ட தொழிலாளர்கள் 

நிவாரணம் கிடைக்காமல் பிழைப்பு செய்து வருவதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக் கின்றனர்.

மண் பானைகள் செய்ய களிமண் தட்டுப்பாட்டு ஏற்படுவ தால், மட்பாண்டங்கள் செய்வதற்குப் பயன்படும் 

களிமண்ணோடு தேவைகளுக்கு ஏற்ப களி மண்ணுடன் வேறுசில கனி மங்களையும் சேர்ப்பது உண்டு என்கின்றனர். 

தங்கள் தொழிலுக்கு தேவையான களிமண் கிடைக்க காவல் துறையினர் கெடுபிடி இருப்பதாலும், வருவாய் துறை அதிகாரிகள் அனுமதியுடன் 

ஏரிகளில் களிமண் எடுக்க அரசு உதவி கேட்டு தமிழக முதலமைச்ச ருக்கு கோரிக்கை விடுத்துள்ள தாகவும் கூறுகின்றனர் மண்பாண்ட தொழிளாலர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings