* சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் சட்டம் -2003 பிரிவு - 4: பொது இடங்களில் புகைப்பிடிப்பது சட்டப்படி குற்றமாகும் பிரிவு - 5: ன் படி புகையிலை பொருட்களை நேரடியா கவோ, மறைமுக மாகவோ விளம்பரம் செய்வது குற்றமாகும்.
பிரிவு - 6 ஏ: 18 வயதிற்கு உட்பட்டவர்கள் புகையிலை பொருட்களை வாங்குவதும், விற்பனை செய்வதும் தண்டனைக் குரிய குற்றம். அது மட்டுமின்றி பெற்றோர், உறவினர், நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்தாலும் தண்டனைக் குரிய குற்றம்.
பிரிவு - 6 பி: கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 100 கெஜம் (ஒரு கெஜம் என்பது 3 அடி) சுற்றளவிற்கு புகையிலை பொருட்களை விற்பது குற்றம். மீட்டரில் சொல்வதென்றால் 100 கெஜம் என்பது 91.44மீட்டர்.
* உணவு பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டுச் சட்டம் -2006
பிரிவு: 2.3.4: மெல்லும் வகை புகையிலையை தயாரிப்பது, தேக்கி வைப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பது சட்டப்படி குற்றம்.
புகையிலை பழக்கத்தில் இருந்து வெளிவர இலவச ஆலோசனைக்கு..
புற்றுநோய் மருத்துவமனை, அடையாறு, சென்னை - 600 036 (கிண்டி சிறுவர் பூங்கா அருகே) என்ற முகவரியையோ அல்லது 044-2235 1615 அல்லது 044-22350131 (விரிவு:189) என்ற எண்களையோ தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்
Thanks for Your Comments