சென்னை நெசப்பாக்க த்தில் வசித்து வந்த கார்த்திகேயன் என்பவர், மின் வாரியத்தில் பணியாற்றி வந்த, கணவனை இழந்த மஞ்சுளா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இருவரும் ரித்தேஷ் என்ற 10 வயது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், நாகராஜ் என்பவருடன், மஞ்சளாவுக்கு பழக்கம் ஏற்பட் டுள்ளது. ஒரு கட்டத்தில் நாகராஜ் - மஞ்சுளா இடையிலான பழக்கம் கள்ளக் காதலாக மாறியது.
இது குறித்து தமது தந்தை கார்த்திகேயனிடம் சிறுவன் ரித்தேஷ் கூறி விட, மஞ்சுளாவை, கணவன் கார்த்திகேயன் கண்டித் துள்ளார்.
இதனை யடுத்து, தம்முடன் பேசுவதை மஞ்சுளா நிறுத்திய தால் ஆத்திர மடைந்த நாகராஜ், சிறுவன் ரித்தேஷை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த கொலை வழக்கில் கடந்த மார்ச் மாதம் சிறை சென்ற நாகராஜ், 2 மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
மகனை கொடூரமாக கொலை செய்த நாகராஜை எப்படியாவது தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற திட்டத்தோடு கூலிப் படையினரை, மஞ்சுளா அணுகி யுள்ளார்.
நான்கு பேர் அடங்கிய கூலிப்படை யிடம் பேரம் பேசிய மஞ்சுளா, கடையில் வேலை பார்த்து வந்த நாகராஜை கூலிப்படை மூலம் கொலை செய்தார்.
திருவண்ணாமலையில் நிகழ்ந்த இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மஞ்சுளா, கூலிப் படையினர் நான்கு பேரையும் அழைத்துக் கொண்டு எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
ஐந்து பேரையும் விசாரித்த நீதிபதி, அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தர விட்டார்.
மகனை கொலை செய்த கள்ளக் காதலனை 10 மாதங்களுக் குள்ளாக திட்டம் தீட்டி மஞ்சுளா தீர்த்து கட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Thanks for Your Comments