பணி முடிந்து ஸ்கூட்டரில் சென்ற பெண் இன்ஜினியரை பைக் ஆசாமிகள் காலால் எட்டி உதைத்து செல்போன் பறித்த சம்பவம் கோட்டூர் புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சென்னை அடையாரை சேர்ந்தவர் தேவி (29). இன்ஜினிய ரான இவர், சின்ன மலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
ேநற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது ஸ்கூட்டரில் அடையாரை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டர் அண்ணா பல்கலைக் கழகம் அருகே உள்ள சர்தார் பட்டேல் சாலையில் வரும் போது பின்னால் வந்த பைக் ஆசாமிகள் இரண்டு பேர், தேவியின் ஸ்கூட்டரை காலால் எட்டி உதைத்தனர்.
இதில் நிலை தடுமாறி தேவி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். அப்போது, பைக் ஆசாமிகள் தேவியிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாகினர்.
இந்த சம்பவத்தில் தேவிக்கு முகம் மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் தேவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து தேவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து, சர்தார் பட்டேல் சாலையில் பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கோட்டூர் புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிசிடிவி கேமராக் களை மட்டுமே போலீசார் நம்பாமல் தினமும் ரோந்து பணியில் உண்மையாக ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Thanks for Your Comments