சென்னையில் உள்ள பெரும் பாலான நிறுவனங்களில் அதிகளவில் தென்மாவட்ட மக்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களின் ஊர்களுக்கு சென்று வருவதற்கு பேருந்து களையும்.,
இரயில் போக்கு வரத்தையும் அதிகளவில் உபயோகம் செய்து வருகின்றனர். மேலும்., சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல அதிகளவில் இரயில்களை இயக்க வேண்டும் என்ற நீண்ட காலமாக மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்ற
தென்னக இரயில்வே நிர்வாகத்தின் மூலம் அதிநவீன சொகுசு மற்றும் விரைவு இரயிலான "தேஜஸ்" அறிமுகம் செய்யப் பட்டது. இந்த இரயில் திட்டத்தை வரும் 27 ம் தேதியன்று பிரதமர் மோடி
மதுரையில் கொடியசைத்து துவக்கி வைக்க விருக்கும் நிலையில்., இரயிலின் சோதனை ஓட்டமானது நடைபெற்றது.
சென்னையில் உள்ள எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக விழுப்புரம் வரை மேற் கொள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தின் போது
இரயிலின் சிறப்ப ம்சங்கள் அனைத்தும் சரி வர இயங்குகிறதா?., இரயிலில் அதிர்வுகள் ஏதேனும் உள்ளனவா? என்று சோதனை மேற் கொண்டனர்.
இந்த இரயிலில் 18 ஏ.சி பெட்டிகள்., 2 உயர் வகுப்பு ஏ.சி பெட்டிகள் என்று இரயிலில் மொத்தமாக 1500 பேர் வரை பயணம் செய்யலாம்.
இந்த இரயில் உள்ள உள்புற அமைப்புகள் அனைத்தும் சர்வதேச தரத்திலும்., விமானத்தில் இருப்பது போன்றே இருக்கைகளில் சிறிய ரக திரைகள் இருக்கும்., அதில் பாடல்கள் அல்லது விடியோக்கள் பார்க்க லாம்.
இரயிலின் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பயணம் செய்தது., இதன் மூலம் அதிகளவு பயணிகள் பயணம் செய்வார்கள் என்று எதிர் பார்க்கப் படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Thanks for Your Comments