குடும்ப வறுமை காரணமாக தனது இரண்டரை வயதில் டென்மார்க்கில் உள்ள தம்பதிக்கு தத்துக் கொடுக்கப் பட்ட தமிழர் ஒருவர் தனது பெற்றோரை தேடி கோவைக்கு வந்துள்ளார்.
கோவையை பூர்வீகமாக கொண்டவர் கேஸ்பர் ஆண்டர்சன். 1975ஆம் ஆண்டு, இரண்டரை வயது குழந்தை யாக இருந்த போது, குடும்ப வறுமை காரணமாக இவரது பெற்றோர் குழந்தைகள் இல்லத்தில் இவரை விட்டு சென்றனர்.
கோவை மாவட்ட நீதி மன்றத்தின் உத்தரவுப்படி டென்மார்க் நாட்டை சேர்ந்த தம்பதியி னருக்கு, பாதுகாவலர் சட்டத்தின் கீழ் கேஸ்பர் ஆண்டர்சன் தத்துக் கொடுக்கப் பட்டார்.
பெற்றோர் இவருக்கு ராஜ்குமார் என பெயரிட் டிருந்தனர். டென்மார்க்கிற்கு சென்ற பின்னர் பெயரை கேஸ்பர் ஆண்டர்சன் என மாற்றி உள்ளனர். பின்னாளில் தான் தத்துக் கொடுக்கப் பட்டதை அறிந்த கேஸ்பர், தனது பெற்றோரை தேடும் முயற்சியில் ஈடுபட தொடங்கினார்.
இவருடைய பெற்றோர் அய்யாவு, மாரியம்மாள் ஆகிய இருவரும் கோவையை அடுத்த பழைய மருதமலை கோவில் சாலையில் உள்ள கருப்பராயன் கோவில் பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது அந்த பெயரில் யாரும் வசிக்க வில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனர். கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் கேஸ்பர் ஆண்டர்சன் தனது பெற்றோரை தேடி வருகிறார்.
கோவை முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சென்று தனது பெற்றோர் குறித்து விசாரித்து வருகிறார் கேஸ்பர் ஆண்டர்சன். 45 ஆண்டுகள் ஆன பின்னரும், பெற்றோரை தொலைத்த குழந்தை யாகவே இவரது மனநிலை உள்ளது.
தன்னை பெற்றவர் களை ஒரு முறையாவது சந்தித்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து பாசப்போராட்டம் நடத்தி வருகிறார் இந்த டென்மார்க் ராஜ்குமார்.
இது குறித்து பேசிய கேஸ்பர் ஆண்டர்சன், என் பெற்றோர் யார் என்று பார்க்க வேண்டுமென ஆசையாக உள்ளது. எதற்காக தத்துக் கொடுக்கப் பட்டேன் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஆவணத்தில் தத்துக் கொடுக்கப் பட்டதற்கான காரணம் இருக்கிறது. அந்த காரணம் உண்மை யாகவும் இருக்கலாம். ஆனால் சரியான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித் துள்ளார்.
Thanks for Your Comments