திருவாரூரில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டி யிடுகிறது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருவாரூர் இடைத் தேர்தலில் நிற்பது குறித்து ஆலோசிக்கப் பட்டது. கூட்டத்தின் முடிவில், திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மேலும் திருவாரூரில் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி யிடுகிறது என ஊடகங் களுக்கும் அறிவித்துள்ளது.
மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் யார் போட்டி யிடுவார் என்பதை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்து அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வந்தவுடன், திருவாரூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில், கமல்ஹாசனே போட்டி யிடுவார் என்றும் கமல் போட்டி யிடுவாரா என்றும் சமூக வலை தளங்களில் கேள்வி எழுப்பத் தொடங்கி விட்டார்கள் நெட்டிசன்கள்.
Thanks for Your Comments