சபாநாயகர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றதை யடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எம்எல்ஏ கருணாஸ் இன்று சந்தித்தார்.
அப்போது, சிவகங்கை யில் மருது பாண்டியர் சிலை அமைக்க இடம் ஒதுக்கக்கோரி முதலமைச்சர் பழனி சாமியிடம் கருணாஸ் மனு அளித்தார்.
இது தொடர்பாக தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:
தோல்வி யடையும் என்பதால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை யில்லா தீர்மானத்தை திரும்பப் பெற்றேன்.
திருவாடானை தொகுதியில் கண்மாய்களை தூர்வாரக்கோரி முதலமைச்சரை சந்தித்தேன்.
தனிப்பட்ட காரணங் களுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments