இடைத்தேர்தல் ரத்து - தலைமைத் தேர்தல் ஆணையம் !

0
தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதிக் கான இடைத் தேர்தல், வரும் 28 -ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித் திருந்தது.


இடைத்தேர்தல் ரத்து -தேர்தல் ஆணையம்

கஜா புயல் நிவாரணப் பணிகள் முழுமையாக நிறைவுபெறாத நிலையில், திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால், பாதிக்கப் பட்டவர்களு க்கு உரிய நிவாரணம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் எனத் தமிழக அரசியல் கட்சிகள் இடைத் தேர்தலை நடத்த எதிர்ப்புத் தெரிவித்தன. 

மேலும், எம்.எல்.ஏ-க்கள் தகுதியிழப்பு தீர்ப்பால் காலியாக இருக்கும் 18 தொகுதி களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் படாதது குறித்துப் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.

எனினும் தி.மு.க, அ.ம.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர் களை அறிவித்தன. ஆளும் அ.தி.மு.க தனது வேட்பாளரை இன்னமும் அறிவிக்க வில்லை. இன்று அ.தி.மு.க வேட்பாளர் அறிவிக்கப் படுவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதி மன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, திருவாரூர் மாவட்டத் தைச் சேர்ந்த மாரிமுத்து, ரத்தினக் குமார் ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. 

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பாக இன்று விசாரணை க்கு வர இருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், திருவாரூர் தொகுதிக்கு அறிவிக் கப்பட்ட தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 

மாநிலத் தேர்தல் ஆணையமும் மாவட்ட அதிகாரி களும் இடைத்தேர்தல் தொடர்பாக எடுத்த அனைத்து நடவடிக் கைகளும் ரத்துசெய்யப் படுவதாக வும், இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறும் தமிழகத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி யுள்ளது.

ஸ்டாலின், பழனிசாமி, தினகரன்

முன்னதாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின், `திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத் துக்குட்பட்ட முக்கியப் பிரமுகர்கள், 

விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கருத்து களைக் கேட்டு, மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப் பிட்டிருந்தார்.


மேலும், கடந்த சனிக்கிழமை முதல்வர் பழனிசாமியைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை, ``திருவாரூர் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். 

இடைத் தேர்தலை விட மக்களவைத் தேர்தலில் அதிக கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம்’’ என்றும் குறிப்பிட்டி ருந்தார்.

மேலும்
தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்ப தாகவும், கஜா புயல் நிவாரணம் முறையாக வழங்கப்பட வேண்டும் என்பதால் இந்த ரத்து வரவேற்க த்தக்கது எனவும் பல்வேறு கட்சிகள் தங்களது கருத்து களைத் தெரிவித்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings