திருவாரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது !

0
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை யடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப் பட்டது. இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடைபெறுவ தாக தேர்தல் கமி‌ஷன் கடந்த 31-ந்தேதி அறிவித்தது. 


இதனால் அன்று முதலே திருவாரூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டது.

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலுக்கு ஆர்.டி.ஓ முருகதாஸ் தேர்தல் நடத்தும் அலுவலரா கவும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் திருமால் மற்றும் திருவாரூர் தாசில்தார் குணசீலி ஆகியோரும் நியமிக் கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் வேட்பு மனுதாக்கல் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று (3-ந்தேதி) முதல் 10-ந்தேதி வரை நடை பெறுகிறது.
இதற்காக இந்த அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கப் பட்டுள்ளது. மேலும் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பும், பேரி கார்டுகளும் அமைக்கப் பட்டுள்ளன.

தேர்தல் நடத்த விதிகளை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன.

இதில் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் துணை தாசில்தார், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வீடியோ கிராபர் இடம் பெற்றுள்ளனர். பறக்கும் படையில் மத்திய அரசு அலுவலர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.

வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கி உள்ளதால், அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி உள்ளனர்.

பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்கள் தேர்வில் இறங்கியுள்ளன. நேர்காணல் நடத்தி இந்த இரு கட்சிகளும் வேட்பாளர் களை அறிவித்த பிறகே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும்.

தினகரன் கட்சியிலும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தினகரன் கட்சி வேட்பாளர் யார்? என அறிவிக்கப் பட்டு விடுவார்.

அதன் பிறகே திருவாரூர் தொகுதியில் அ.தி.மு.க.- தி.மு.க. -அ.ம.மு.க. கட்சிகளின் மும்முனை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.


இன்று வேட்பு மனுதாக்கல் செய்யும் வேட்பாளர் களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

வேட்பு மனு தாக்கல் ஊர்வலம் குறித்து முன்னதாகவே உரிய முடிவு செய்து அனுமதி பெற வேண்டும். தேர்தல் அலுவலகம் முன்பு 200 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப் பட்டுள்ளது. 

வேட்பாளர்கள் மற்றும் முன்மொழிபவர் உள்பட 6 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப் படுவார்கள். இன்று தொடங்கும் வேட்பு மனு தாக்கல் முதல் நாளில், சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது.
வேட்புமனு வாபஸ் பெற வருகிற 14-ந்தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப் படுகிறது.

அதன் பின்னரே அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். தொகுதி முழுவதும் தலைவர்கள், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.

இதன் பிறகு வாக்குப்பதிவு வருகிற ஜனவரி 28-ந்தேதி நடைபெறுகிறது. 31-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறு கிறது.

தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே அதாவது குறுகிய காலமே உள்ளதால் திருவாரூர் தொகுதியில் அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்ற தொடங்கி விட்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings