பொதுவிநியோகத் திட்ட நியாய விலை கடை ஊழியர்களு க்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பணிக்கு சிறப்பு படி தமிழக அரசு வழங்க வேண்டும்' என்று கூட்டுறவு ஊழியர் சங்கம் கோரி யுள்ளது.
இது குறித்து சங்கத்தின் மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5.1.2019 அன்று செய்தித் தாள்களில் வெளியான விளம்பரத்தில் “கூட்டுறவு உணவு
மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் தமிழக மக்களுக்கு முதலமைச்சரின் பொங்கல் பரிசு திட்டம் அறிவிக்க ப்பட்டு நடை முறைக்கு வந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை யொட்டி விலையில்லா வேஷ்டி சேலையும் வழங்கப்பட உள்ளது
வழக்கமான அரிசி, பருப்பு, சீனி, பாமாயில் மற்றும் சம்பந்தப் பட்ட பண்டக சாலையின் மளிகைப் பொருட்கள் வழங்குகின்ற பணியையும் மேற்கொள்ள வேண்டி யுள்ளது.
இதன் காரணமாக அனைத்து நியாய விலை கடை பணியாளர்கள் கூடுதல் நேரம் பணி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் துறை அதிகாரிகள் கேட்கின்ற புள்ளி விவரங் களையும் தாமதமின்றி கொடுக்க வேண்டிய சூழ்நிலைஏற்பட்டுள்ளது.
எனவே நியாய விலை கடை ஊழியர்கள் வழக்கமாக செய்கின்ற பணியை விட கூடுதலாக பணி செய்ய வேண்டி யுள்ளது.
எனவே தமிழக அரசு கூடுதலாக விற்பனையா ளருக்கு ரூபாய் ரூ.2 ஆயிரம், கட்டுநரு க்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு படியாக வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Thanks for Your Comments