ஐபோனுக்காக கிட்னியை விற்ற இளைஞர்... பாதித்ததால் சிகிச்சை !

0
ஐபோனுக்கு ஆசைப்பட்டு கிட்னியை விற்ற சீன இளைஞரின் இன்னொரு கிட்னியும் பாதித்ததால் 7 ஆண்டு களாக படுத்த படுக்கை யாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஐபோனுக்காக கிட்னியை விற்ற இளைஞர்... பாதித்ததால் சிகிச்சை !

சுமார் 7 வருடங்களுக்கு முன்னால் சியோ வாங் என்னும் 17 வயது டீனேஜ் இளைஞர் ஐபோன் வாங்க ஆசைப் பட்டார். அப்போது தான் ஐபோன் 4 அறிமுகமாகி இருந்தது. 


பள்ளியில் அனைத்து நண்பர்களும் ஐபோன் 4-ஐ வாங்கிப் பயன்படுத்திக் கொண்டி ருந்தனர். ஐபோன் இல்லாததால் வாங், மற்றவர் களால் கேலிக்கு உள்ளாக்கப் பட்டார்.

வாங் வீட்டின் பொருளாதார சூழ்நிலை, ஐபோன் வாங்க இடம் கொடுக்க வில்லை. நண்பர்கள் சிலர் கிட்னியை விற்றுப் பணம் பெறலாம் என்று யோசனை கூறினர். சட்ட விரோதமாக உறுப்பு விற்கும் மருத்துவமனை ஒன்றில் விசாரித்தார் வாங். 

ஆரோக்கிய மாக உயிர் வாழ ஒரு கிட்னியே போதும் என்று போலி மருத்துவர்கள் சிலர் உறுதி யளித்தனர். கிட்னியைப் பெற்றுக் கொண்டு சுமார் ரூ. 2 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வாக்கு கொடுத்தனர்.

அந்தப் பணம் ஐபோன் வாங்குவ தற்குத் தேவைப்படும் தொகையை விட அதிகமாகவே இருந்தது. உடனே கிட்னியை விற்க முடிவெடுத்தார் 

வாங். அறுவை சிகிச்சை முடிந்த ஒரு வாரத்தில் பழைய நிலைக்கு வந்து விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, வாங்கின் உடல்நிலை மோசமானது. அறுவை சிகிச்சை சுகாதார மான முறையில் செய்யப் படாததால் தொற்று ஏற்பட்டது.

இதை வாங் கவனிக்கா ததால், தொற்று பெரிதாகியது. இதை அவரின் பெற்றோர் அறிந்து முறையான சிகிச்சை அளிப்பதற்குள், மற்றொரு கிட்னியும் பாதிக்கப் பட்டது. 


மேலும்
இதனால் கடந்த 7 ஆண்டுக ளாகப் படுத்த படுக்கையாக இருக்கிறார் வாங். அவரின் பெற்றோர் டயாலிசிஸ் மற்றும் பிற செலவுகளுக் காகத் திண்டாடி வருகின்றனர்.



Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings