தமிழக அரசு மீது அதிருப்தியில் உள்ள மக்களை 'ஐஸ்' வைத்து சரிக்கட்டும் முயற்சியாக அனைத்து ரேஷன் கார்டுகளு க்கும் பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
நேற்று துவங்கிய சட்டசபை கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தன் உரையில், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளோருக்கு இந்த பரிசுத்தொகை கிடைக்காது.
கடந்த, 2016ல், பொங்கல் தொகுப்புடன், ரேஷன் கார்டுதாரர் ஒவ்வொருவ ருக்கும், 100 ரூபாய் ரொக்கம் வழங்கப் பட்டது. அடுத்து வந்த ஆண்டுகளில், பணம் வழங்குவது நிறுத்தப் பட்டது.
இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகைக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப் பட்டபோது, அதில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து, எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும், பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கம் வழங்குவது குறித்து, அரசு தரப்பில் ஆலோசிக் கப்பட்டு வந்தது.
'அவ்வாறு செய்தால், மற்ற மாவட்ட மக்கள் அதிருப்தி அடைவர். இது, லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில், ஆளுங்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என, கட்சியினர் தெரிவித்தனர்.
இதை யடுத்து, அனைத்து ரேஷன் கார்டுதாரர் களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1,000 ரூபாய் வழங்குவது எனவும், இந்த அறிவிப்பை, கவர்னர் உரையில் இடம் பெறச் செய்வது எனவும், அரசு முடிவு செய்தது.
இதன்படி, நேற்று சட்டசபை கூடியும், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நிகழ்ச்சி உரையில், இந்த அறிவிப்பு இடம் பெற்றது.
கவர்னர் தன் உரையில் கூறியதாவது:
வெளிப்படை யான, சீரான பொது வினியோக திட்டத்தை உறுதி செய்வதற் காக, 2.01 கோடி குடும்பங் களுக்கு, ஆதார் எண்ணுடன் இணைக் கப்பட்ட, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப் பட்டுள்ளன.
காவிரி வடிநிலப் பகுதிகளில், கஜா புயலால் ஏற்பட்ட தாக்கம்; வட மாவட்டங்களில் பரவலாக ஏற்பட்டுள்ள, வறட்சியின் தாக்கம் உள்ளது.
இதனால், பொங்கல் திருநாளை, அனைவரும் சிறப்பாகக் கொண்டாட, அனைத்து ரேஷன் கார்டுகளு க்கும், பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய, சிறப்பு தொகுப்பை அரசு வழங்க உள்ளது.
இது தவிர, திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், திருவாரூர் மாவட்டம் தவிர, மற்ற மாவட்டங்களில், ஒவ்வொரு குடும்பத் திற்கும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1,000 ரூபாய், அரசால் வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.
கஜா புயல் பாதிப்புக்கு சரியாக நிவாரணம் கிடைக்க வில்லை என, டெல்டா மாவட்ட மக்கள், அதிருப்தியில் உள்ளனர்.
'அரசு சரியாக செயல்படவில்லை; பணிகள் ஒழுங்காக நடக்க வில்லை' என, தமிழகம் முழுவதும், ஏற்கனவே, அரசு மீது, மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இது, லோக்சபா தேர்தலில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, கூறப்படு கிறது. இதை உணர்ந்த தமிழக அரசு, அதிருப்தியை சரிகட்டும் வகையில், பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய் அறிவித்து, மக்களுக்கு, 'ஐஸ்' வைத்துள்ளது.
இடைத்தேர்தல் காரணமாக, திருவாரூர் மாவட்ட மக்களுக்கு மட்டும், பரிசுத் தொகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
1,000 ரூபாய் பரிசு, எந்த அளவிற்கு அ.தி.மு.க.,விற்கு கை கொடுக்கும் என்பது, தேர்தலின்போது தெரியவரும்.
முக்கிய அறிவிப்புகள் என்ன?
* ஜெர்மன் வங்கி உதவியுடன் போக்கு வரத்துக் கழகங்களை மறு சீரமைக்க ஒரு விரிவான திட்டத்தை அரசு செயல் படுத்த உள்ளது.
பழைய பஸ்களுக்கு பதிலாக சுற்றுச் சூழலுக்கு உகந்த எரிபொருள் செயல்திறன் மிக்க 'பி.எஸ்., - 6' பஸ்கள் பயன்பாட்டிற்கு வரும். சென்னை, கோவை, மதுரை மாநகரங்களில் மின்பஸ்களும் இத்திட்டத்தில் கொள்முதல் செய்யப் படும்.
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள குடிசைப் பகுதிகளை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி யுடன் 'தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு திட்டம்' என்ற திட்டத்தை அரசு வடிவமைத் துள்ளது.
சென்னையை தவிர்த்து மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் இத்திட்டத்தை செயல் படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியை அரசு நாடியுள்ளது.
* பொது கட்டட விதி முறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதால் கட்டுமானத் துறையில் எளிதில் தொழில் புரிவதற்கான வாய்ப்புகள் மேம்படும்.
* சென்னையில் இம்மாதத்தி ற்குள் மெட்ரோ ரயில் சேவையின் முதல்கட்ட திட்டத்தின் அனைத்து வழித்தடங்களிலும் ரயில் இயக்கப்படும்.
* வாகன உற்பத்தி துறையில் தமிழகம் முக்கிய மையமாக விளங்கும் நிலையில் அடுத்த தலைமுறை மின்சார வாகனங்கள் தயாரிப்பை ஊக்குவிக்க சிறப்பு சலுகை களுடன், கவனம் செலுத்தப்படும்.
* பாதுகாப்பு தளவாடங் களையும் வானுார் சாதனங் களையும் தயாரிப்பதை ஊக்கப் படுத்த தமிழ்நாடு வானுார்தி, பாதுகாப்பு தொழில் கொள்கையை அரசு விரைவில் வெளியிட உள்ளது.
* புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொடக்க தொழில் முனைவோர் தொழில் துவங்கவும் புதிய கண்டு பிடிப்புகளை ஊக்கு விக்கவும் புதிய கொள்கையை அரசு விரைவில் வெளியிட உள்ளது.
ஜெர்மன் வங்கி உதவியுடன் போக்குவரத்துக் கழகங்களை மறு சீரமைக்க ஒரு விரிவான திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.
பழைய பஸ்களுக்கு பதிலாக சுற்றுச் சூழலுக்கு உகந்த எரிபொருள் செயல்திறன் மிக்க 'பி.எஸ்., - 6' பஸ்கள் பயன்பாட்டிற்கு வரும். சென்னை, கோவை, மதுரை மாநகரங்களில் மின் பஸ்களும் இத்திட்டத்தில் கொள்முதல் செய்யப்படும்.
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள குடிசைப் பகுதிகளை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி யுடன் 'தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு திட்டம்' என்ற திட்டத்தை அரசு வடிவமைத் துள்ளது.
சென்னையை தவிர்த்து மாநிலத்தின் மற்ற பகுதிகளி லும் இத்திட்டத்தை செயல் படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியை அரசு நாடியுள்ளது.
* பொது கட்டட விதிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதால் கட்டுமானத் துறையில் எளிதில் தொழில் புரிவதற்கான வாய்ப்புகள் மேம்படும்.
* சென்னையில் இம்மாதத்திற்குள் மெட்ரோ ரயில் சேவையின் முதல்கட்ட திட்டத்தின் அனைத்து வழித்தடங் களிலும் ரயில் இயக்கப்படும்.
* வாகன உற்பத்தி துறையில் தமிழகம் முக்கிய மையமாக விளங்கும் நிலையில் அடுத்த தலைமுறை மின்சார வாகனங்கள் தயாரிப்பை ஊக்குவிக்க சிறப்பு சலுகைக ளுடன், கவனம் செலுத்தப்படும்.
* பாதுகாப்பு தளவாடங் களையும் வானுார் சாதனங் களையும் தயாரிப்பதை ஊக்கப் படுத்த தமிழ்நாடு வானுார்தி, பாதுகாப்பு தொழில் கொள்கையை அரசு விரைவில் வெளியிட உள்ளது.
மேலும்
* புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொடக்க தொழில் முனைவோர் தொழில் துவங்கவும் புதிய கண்டு பிடிப்புகளை ஊக்கு விக்கவும் புதிய கொள்கையை அரசு விரைவில் வெளியிட உள்ளது.
Thanks for Your Comments