சென்னை வேளச்சேரி - கடற்கரை பறக்கும் ரயில் பாதையில் உள்ள தரமணி ரயில் நிலைய த்தில் சனிக்கிழமை இரவு வாலிபருடன் அமர்ந்திருந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
அந்த இளம்பெண் வாலிபர் ஒருவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த 3 பேர் இருவரையும் மிரட்டி யுள்ளனர், அவர்கள் மேல் சந்தேகம் இருக்கிறது என்றும் வழக்கு போடுவோம் என்று மிரட்டி பணம் கேட்ட தாகவும் தெரிகிறது.
திடீரென கூட இருந்த வாலிபரை மிரட்டி வெளியே விரட்டி விட்டு பெண்ணை விசாரிக்க வேண்டும் என்று கூறி தனியே அழைத்துச் சென்று அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர்.
இதனை யடுத்து அந்தப் பெண் கடும் பீதியில் கத்திக் கூச்சல் போட்டுள்ளார். எப்படியோ அவர்களிட மிருந்து தப்பி திருவான்மியூர் ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை யடுத்து எழும்பூர் ரயில் நிலைய போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் நடந்ததைக் கூற வாக்கு மூலம் பெறப்பட்டது, அவரிடம் நடத்திய விசாரணை யில் அந்த 3 பேரும் ரயில்வே ஊழியர்கள் என்பது தெரிய வந்தது.
இதனை யடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து பாலியல் தொல்லை கொடுத்தல், வழிப்பறி, மிரட்டல் ஆகிய வற்றுக்கு எதிரான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். பெண்கள் வன்கொடுமைச் சட்டமும் இவர்கள் மீது பாய்ந்துள்ளது.
இவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்த்தி சிறையில் அடைத்தனர் போலீஸார். பாதிக்கப்பட்ட பெண் வெளியூரி லிருந்து சென்னையில் வந்து பணி புரிபவர் என்று தெரிகிறது.
பறக்கும் ரயில் நிலையங்கள் இரவு நேரங்களில் விரிச்சோடி காணப்படுவ தால் சமூக விரோதிகளின் நடமாட்டம் காணப் படுவதாகவும் செய்திகள் வெளியாகின,
சில நாட்களுக்கு முன்னதாக மின்சார ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளான ஒரு பெண்ணை போலீஸ் ஒருவர் காப்பாற்றிய சம்பவமும் நடந்தது.
இந்நிலையில் தரமணியில் இந்தச் சம்பவம், பறக்கும் ரயில் நிலையங் களில் இரவு நேரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments