பபுக் புயல், மேற்குப் பசிபிக்பெருங்கடலில் உருவாகி யுள்ளது. இந்தப் புயலுக்கு பெயர் வைத்த நாடு, லாவோஸ். லாவோ மொழியில் பபுக் என்றால் பெரிய கெளுத்தி மீன் என்று அர்த்தம்.
பெயருக்கு ஏற்றார் போலே புயலின் சேட்டையும் அமைந்துள்ளது. கெளுத்தி மீன் குத்தினால் பாம்பு கொத்தியதைப் போல் இருக்கும்,
ஆனால் விஷம் இருக்காது. அதே போன்றே தாய்லாந்தின் ஒரு பகுதியைக் கலக்கி வருகின்றது.
பபுக் புயலால் பாதிக்கப்படும் நாடுகள்
தற்பொழுது தாய்லாந்து கடற்கரை சீற்றத்துடன் காணப் படுகிறது. கனமழை பெய்து வருகின்றது.
இப்புயல் இன்று, வடக்கு மலேசியப் பகுதியைக் கடக்க உள்ளது. இருப்பினும் இப்புயலால் பெரிய ஆபத்து மலேசியா விற்கு இருக்காது.
அங்கிருந்து 45 மைல் வேகத்தில் அந்தமானைச் சென்றடையும். 6-ம் தேதி அந்தமானை கடக்கும். இன்று இரவு மலேசியா எவ்வளவு பாதிக்கப்பட உள்ளது என்பதைப் பொறுத்தே அந்தமானின் பதிப்புகளை கணிக்க முடியும்.
தமிழகத்தை தாக்குமா?
இரண்டு நாட்கள் முன்புவரை இப்புயல் தமிழகத்திற்கு வரும் என எதிர் பார்க்கப் பட்டது.
ஆனால், பபுக்புயல் அந்தமான் தீவுடன் வலுவிழந்த நிலையில் பர்மா, தாய்லாந்து பகுதியை நோக்கிச் செல்லவே வாய்ப்பு அதிகம் உள்ளது.
இருப்பினும், தமிழக மீனவர் களுக்கு புயல் எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. அந்தமான் கடற் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளனர்.
Thanks for Your Comments