தமிழகத்தில் தற்போதிரு க்கும் 32 மாவட்டங்களில் அதிகப் பரப்பளவைக் கொண்டது விழுப்புரம் மாவட்டம். சுமார் 7,190 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 34.5 லட்சம்.
நான்கு வருவாய் கோட்டங்கள், ஒன்பது தாலுகாக்கள், மூன்று நகராட்சி, 14 பேரூராட்சி, 22 ஊராட்சி ஒன்றியங்கள், 1,099 ஊராட்சிகள் அமைந்துள்ளன.
விழுப்புரம் நீங்கலாக மற்ற மாவட்டங்கள் சராசரியாக 13 ஒன்றியங் களாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், விழுப்புரத்தில் மட்டும் 22 ஒன்றியங்கள் இருக்கின்றன. குறிப்பாக, கள்ளக் குறிச்சியை ஒட்டி யிருக்கும் கல்வராயன் மலையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன.
இங்கிருக்கும் மக்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் கண்காணிப்பாளர், வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங் களுக்குச் செல்ல வேண்டும்
என்றால் குறைந்த பட்சம் 130 கிலோ மீட்டர் பயணித்து தான் விழுப்புரம் செல்ல வேண்டும். அதே போல அவர்களின் குறைகளை உடனடியாகக் கலைவதில் மாவட்ட அதிகாரிக ளுக்கும் நிர்வாகச் சிக்கல் நீடித்து வருகிறது.
``கள்ளக் குறிச்சியைத் தனி மாவட்டமாக அறிவித்தால் மலைவாழ் கிராமங் களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத் தப்படும். அரசு மருத்துவ மனைகள், பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
தனியார் தொழிற் சாலைகள் அதிக அளவில் வரும் வாய்ப்புள்ள தால் இந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர் களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும்.
அதன் மூலம் பொருளாதார ரீதியாகக் கள்ளக்குறிச்சி வளர்ச்சி அடையும்” என்பது இந்தப் பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கை.
கடந்த 2016 சட்டமன்றப் பொதுத் தேர்தல் வாக்குறுதியில் “கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகப் பிரிக்கப்படும்” என்று மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக சட்டப் பேரவையில் இன்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் 33-வது மாவட்ட மாகக் கள்ளக் குறிச்சியை அறிவித்ததோடு, புதிய மாவட்டத்துக்கு விரைவில் தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப் படுவார்கள் என்று தெரிவித் திருக்கிறார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர் களும் வரவேற்பு தெரிவித்திருக் கிறார்கள். தங்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகிறார்கள் கள்ளக்குறிச்சி மக்கள்.
விழுப்புரம், செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை, திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி என 11 தொகுதி களைக் கொண்டி ருக்கிறது விழுப்புரம் மாவட்டம்.
மேலும்
இதில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் உள்ளிட்ட தொகுதிகள் புதிய மாவட்ட த்தில் இணையலாம் என்று கூறப் படுகிறது.
Thanks for Your Comments