ஆம்புலன்ஸ் -க்கு ஓடி ஓடி வழி ஏற்படுத்தும் காவலர் - குவியும் பாராட்டுகள் !

1 minute read
0
கேரளாவில் ஒரு காவலர் ஆம்புலன்ஸு க்கு வழி ஏற்படுத்தித் தரும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


பொதுவாக இந்தியாவில் வாகனப் பயன்பாடு அதிகம். காலை 9 மணி மற்றும் மாலை 6 மணிக்கு முக்கியமான நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும். 

அதிலும் விழா நாள்கள் விடுமுறை நாள்களில் சொல்லவே வேண்டாம். சாலையில் நடக்கவும் இடமில்லாமல் கார்கள் அணிவகுத்து நிற்பதை நாம் பார்த்திருப்போம். 

போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்தவும், வாகனப் பயன் பாட்டைக் குறைக்கவும் பல மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றன. இருந்தும் போக்குவரத்து குறைந்த பாடில்லை. 

அதிலும் அவசர வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் ஆகியவை போக்கு வரத்தைக் கடக்க பெரும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டும். இதைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று மாலை கேரளாவின் கோட்டையம் பகுதியில் ஒரு காவலர் செய்த விஷயம் வீடியோவாக வெளியாகி சமூக வலை தளங்களில் பெரும் ஹிட் அடித்துள்ளது. 

நேற்று விடுமுறை நாள் என்பதால் கோட்டையம் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்தது. அந்தப் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கிக் கொள்கிறது. 


பிறகு அங்கிருந்த காவலர் ஒருவர் சாலையின் நடுவில் நின்ற வாகனங் களை நிறுத்தி போக்குவரத்தைச் சரி செய்து ஆம்புலன்ஸு க்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அவர் ஓடி ஓடி வழி ஏற்படுத்தும் காட்சிகளை ஆம்புலன்ஸில் உள்ளவர் வீடியோ எடுத்து சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார். 

மேலும்
அந்த ஆம்புலன்ஸ் போக்கு வரத்திலிருந்து வெளியில் வரும் வரை அதற்கு முன்னாலே ஓடிச் சென்று வழி ஏற்படுத்தித் தந்த காவலர் ரெஞ்சித் குமார் நாதா கிருஷ்ணனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings