அவசரப் பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மகள் ரம்யாவை (பெயர் மாற்றம்) பார்த்துக் கதறிக் கொண்டுள்ளார் தாய் விமலா. ஆனால், கிருஷ்ணகிரி மருத்துவர்களோ இங்க முடியாது, தருமபுரி கொண்டு போங்க என அனுப்பி விட்டனர்.
ரம்யாவை பரிசோதனை செய்த தருமபுரி மருத்துவ மனைக் கல்லூரி மருத்துவர்கள், இங்கே முடியாது. சேலம் கொண்டு போங்க என்று சேலம் அனுப்பி வைத்து விட்டனர். ரம்யாவுக்கு என்ன நடந்தது?
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள புங்கனை கிராமத்தைச் சேர்ந்த விமலா, கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் கூக்கூடப் பட்டியைச் சேர்ந்த குமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
விமலாவுக்கு அடுத்தடுத்து மூன்று பெண் பிள்ளை பிறந்தது. மூன்றும் பெண் பிள்ளைகள் என்பதால், கணவன் குமாருக்கும் விமலாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். முதல் பெண் குழந்தையை மட்டும் கணவரிடம் ஒப்படைத்து விட்டு, விமலா தாய் வீட்டுக்குத் திரும்பி விட்டார்.
மற்ற இரண்டு பெண் பிள்ளைகளை தன்னுடன் அழைத்து வந்து விடுகின்றார் விமலா. தனது இரண்டு பெண் பிள்ளை களையும் படிக்க வைக்க திருப்பூர் பனியன் கம்பெனிகளில் கூலி வேலைக்கு அவ்வப்போது சென்று வந்தார். நினைத்ததுபோலவே தனது இரண்டு பிள்ளைகளைப் படிக்க வைத்து வந்தார்.
இதில், ரம்யா கடந்த ஆண்டு ப்ளஸ் டூ முடித்து விட்டு, தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு சேர்ந்தார். வழக்கம் போல தாய் விமலா திருப்பூரில் பனியின் கம்பெனி வேலைக்குச் சென்று விட, தாத்தாவின் பாதுகாப்பில் கல்லூரிக்குச் சென்று வந்தார்.
பொங்கலுக் காக வீட்டுக்கு வந்த விமலா மகள்களு க்குத் தேவையான புதுத் துணியை எடுக்க ஊத்தங்கரை நகருக்கு வந்துள்ளனர். அப்போது ரம்யா திடீரென மயக்கம் போட்டு விழுந்து வலிப்பு வந்து துடிக்கவே, ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு போய் சேர்த்துள்ளார்.
ரம்யாவைப் பரிசோதித்த டாக்டர், ரம்யா கர்ப்பமடைந்து குழந்தை முழு வளர்ச்சி அடைந்து ள்ளதைத் தெரிவித்துள்ளனர். துடித்துப் போனார் விமலா, யார் காரணம் என்று விசாரித்த போது, புங்கனைக் காலனியைச் சேர்ந்த தமிழரசன் தன்னை மிரட்டி தவறான உறவு வைத்துக் கொண்டதையும் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களோ, ரம்யாவின் உடலில் போதுமான பலம் இல்லை, வயிற்றில் குழந்தை வளர்வது உயிருக்கே ஆபத்தாகப் போய் முடியும் என்று எச்சரிக்கவும் அறுவை சிகிச்சை செய்து ஆண் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். ஆனால், குழந்தை இறந்தே பிறந்துள்ளது.
சுய நினைவை இழந்துள்ள ரம்யா கடந்த நான்கு நாள்களாகக் கண் விழிக்கவே இல்லை. கிருஷ்ணகிரி, தருமபுரி, தற்போது சேலம் மருத்துவமனை என அலைந்து திரிந்தும் இன்று வரை சுயநினைவு திரும்பாமல் ஐசியு வார்டில் கண் விழிக்காமல் தீவிர சிகிச்சை இருந்து வருகின்றார் ரம்யா.
கல்லாவி காவல் ஆய்வாளர் வீரப்பன், மாணவி ரம்யாவுக்கு 17 வயது நடைபெறுவ தால், சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தல் மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தமிழரசனை சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
புங்கனைக் காலனியைச் சேர்ந்த தமிழரசனுக்கு முன்பே திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ரம்யாவோ மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் புங்கனையில் சாதிக் கலவரம் வர வாய்ப்புள்ள தாகக் கூறி காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
Thanks for Your Comments