சரியப் போகும் அமேசான் நிறுவன பங்குகள் - காரணம் விவாகரத்து?

0
இன்றைய இணையதள சந்தையில் ஒரு தவிர்க்க முடியாத சாம்ராஜ்யமாக அமெரிக்க நாட்டின் வால் ஸ்ட்ரீட்-ல் உள்ள மிகப்பெரிய நிறுவனமான அமேசான் உள்ளது. 
இதன் பங்குகள் கடந்த வாரம் மிகப்பெரிய ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இதற்கு காரணம் ஒரு திருமண விவாகரத்து என்றல் உங்களால் நம்ப முடிகிறதா? 

ஆம், பங்குச் சந்தையின் இந்த பெரிய ஏற்ற இறக்கங் களுக்கு கரணம் அமேசான் நிறுவனர் ஜெப் பேஜுஸ்-ன் விவாகரத்து அறிவிப்பு ஆகும்.

டிவிட்டரில் விவாகரத்து அறிவிப்பு

போர்ப்ஸ் பத்திரிகையின் கருத்துப்படி, தற்போதைய உலகின் முதல் பெரிய பணக்காரர் ஜெப் பேஜுஸ். இவருடைய சொத்து மதிப்பு மட்டுமே 136.2 பில்லியன் அமெரிக்கா டாலர்கள். 
இவர் கடந்த புதன் கிழமை (ஜனவரி 9, 2019) அன்று தனது அதிகார பூர்வமான டிவிட்டர் பக்கத்தில், தனது 25 வயது மனைவி மெக்கன்சி உடன் விவாகரத்து செய்ய விருப்பதாக அறிவித்தார். 

அவர் அறிவித்த அடுத்த நாள் வியாழக்கிழமை, அமேசான் நிறுவன பங்குகள் ஏறுமுகமாக தொடங்கி னாலும் மதிய நேரத்தில் பங்கு மதிப்பு ௦.5 சதவீதம் சரிந்தது.

பங்குச்சந்தை வீழ்ச்சி ஏன்?
இந்த விவாகரத்திற்கு பின்பு பேஜுஸ் மற்றும் மெக்கன்சி, தங்களது எவ்வாறு தீர்மானிக்கப் போகிறார்கள் என்பது மிக முக்கியமாக பார்க்கப் படுகிறது. 

இவர்கள் இருவரும் அமேசான் நிறுவனத்தில், 811.4 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் மதிப்புள்ள 16 சதவீத உரிமைகளை கொண்டுள்ளனர். 

இவர்கள் இருவரும் தற்பொழுது வாஷிங்டன் மாநிலத்தில் வசித்து வருவதால், அம்மாநில விவாகரத்து சட்டப்படி, 

திருமணத் திற்கு பின்பு வாங்கப்பட்ட அனைத்து சொத்துக்களும் கணவன்- மனைவி இருவருக் கிடையே சரிசமமாக பங்கிட்டுக் கொள்ளப்பட வேண்டும்.

அமேசான்

பெரும்பாலான ஆய்வாளர்கள் மற்றும் நிதி மேலாளர்கள், இந்த விவாகரத்து நிகழ்வால் அமேசான் நிறுவனத்தின் தலைமைத் துவத்தில் 

எந்த வொரு மாற்றமோ அல்லது வளர்ச்சியோ பாதிக்கப்படாது என்று மிகவும் ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

சீபிரீஸ் பாட்னர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் டௌக்ஹ் காஸ் என்பவர். குறைந்த கால பங்கு விற்பனை யாளர்களில் முக்கியமான நபர். 

அப்படிப்பட்ட ஒருவர் இந்த விவாகரத்து செய்தி வெளியில் வந்ததும் தனது அமேசான் பங்குகளை விற்று விட்டார். 
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கடந்த டிசம்பர் மாதம்தான் அமேசான் நிறுவனத்தை தனது "சிறந்த யோசனைகள் பட்டியலில்" ஒரு நிறுவனமாக குறிப்பிட்டி ருந்தார்.

சட்டம் என்ன செய்யும்?

பேஜுஸ் மற்றும் மெக்கன்சி ஜோடி, அமெரிக்கா நாடு முழுவதும் ஏராளமான குடியிருப்புக்களை வாங்கியுள்ளனர். 

எனவே எந்த மாகாணத்தில் சொத்துக்களை சமமாக பிரிக்க தேவையில்லை என்ற சட்டம் இருக்கிறதோ அந்த மாகாணத்தில் விவாகரத்து வழக்கு தொடுக்கப் படும் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
பெர்னார்ட் கிளேர் என்ற நியூயார்க் நகர திருமண வழக்கறிஞர் கருத்துப்படி, நீதிபதி ஒருவர், 

மெக்கன்சியின் அமேசான் நிறுவன பங்குகளை தீர்மானிக்க, அவருடைய கணவரின் வெற்றியில் அவருக்குள்ள பங்கினை கணக்கில் கொள்வார். 

அதாவது பேஜுஸ்-கு முக்கியமான முடிவுகள் எடுக்க உதவியது அல்லது குழந்தைங்களை வீட்டில் கவனித்துக் கொள்வதின் மூலம் பேஜுஸ்-ஐ 

அவருடைய வேலையில் சுதந்திரமாக கவனம் செலுத்த உதவியது போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

அமெரிக்க பத்திரங்கள்

ஜெப் பேஜுஸ், தனது பங்குகள் எதனையாவது யாருக்காவது மாற்ற வேண்டும் என விரும்பினால், அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை 

ஆணையத்திற்கு உட்பட்டே அதனை செயல்படுத்த முடியும். பேஜுஸ் போன்று ஒரு அலுவலர் அல்லது 

நிறுவனர் தனது பங்குகளை பரிமாற்றம் செய்த இரண்டு நாட்களுக்குள் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் (SEC) விண்ணப்பம் 4-ஐ சமர்ப்பிக்க வேண்டும். 

ஆனால் அவருக்கு இதிலிருந்து விதிவிலக்கு வழங்கவும் சட்டத்தில் இடமுள்ளதாக ப்ரோக் ரோமனக் என்ற SEC வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
என்னதான் அவருக்கு விண்ணப்பம் 4-ஐ சமர்பிப்பதி லிருந்து விதிவிலக்கு இருந்தாலும், நிறுவனத்தில் நிலையில் குறைந்தது 1 சதவீதம் மாற்றம் இருந்தாலும் 

தனது அமேசான் நிறுவன கையிருப்புகள் பற்றிய தகவல்களை SEC உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மற்றுமொரு டி.சி. செக்யூரிட்டீஸ் வழக்கறிஞர் தாமஸ் கோர்மான் தெரிவித்துள்ளார். 

மெக்கன்சியும் 5 சதவீதத்திற்கு அதிகமான பங்குகளை பெரும் பொழுது, அவரும் அதே போல் SEC உடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அறிஞர்கள் கூறுவது என்ன?

பீட்டர் ஹென்னிங், வெய்ன் மாகாணத்தில் உள்ள ஒரு பத்திரப் பேராசிரியர் கருத்துப்படி, பேஸ்புக், கூகிள் போன்ற 

நிறுவனங்களை போல அல்லாமல் அமேசான் அதன் நிறுவனர் களுக்கு முன்னுரிமை வாக்கை அளிக்கிறது. 

எனவே மெக்கனசிக்கு அதிக பங்குகள் கிடைத்தால் அவரால் பெரிய அளவில் முடிவுகள் எடுக்க முடியும். இதே கருத்தை கோர்மனும் ஆமோதிக்கிறார். 

மெக்கன்சியின் பெரும் பான்மையை நீர்த்து போக செய்ய வேண்டு மானால் ஏனைய பங்கு தாரர்களின் ஓட்டுக்கள் தேவைப்படும். 

இருப்பினும் இவ்வாறு நடக்க சாத்தியக் கூறுகள் குறைவு என்றும் கோர்மான் கூறுகிறார்.
மொனெட்டா நிதி நிறுவனத்தின் மேலாளர் ராபர்ட் பக்ரிள்ள, தன்னுடைய அமேசான் பங்குகளை விற்கப்போவ தில்லை எனவும், 

அதே சமயம் வளர்ச்சியில் குறியாக இருக்கும் போர்ட்ஃ போலியோ மேலாளர்கள் தங்கள் அமேசான் பங்குகளை குறைக்கலாம் என எதிர் பார்ப்பதாகவும் கூறியுள்ளார். 

அது மட்டுமில்லாமலா எது எப்படியோ, இது இந்த விவாகரத்து குறைந்த காலத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அவர் அடித்து கூறுகிறார்.

நம்பிக்கை உள்ளது

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த பங்குகள் ஆய்வாளர் மைக்கேல் பாச்ட்டேர் என்பவர் "பேஜுஸ், தனது விவகாரத்தால் மனமுடைந்து நிறுவனத்தை நடத்த முடியாமல் போனாலொழிய 

அதன் வளர்ச்சி குறைவாக இருக்குமே தவிர, மற்ற காரணகளால் இருக்காது. அவ்வாறு நடக்கவும் சாத்தியமில்லை" என்று கூறுகிறார்.
பேஜுஸ் கடந்த காலத்தில் அமேசான் நிறுவனத்தை தனது சொந்த நிறுவனம் போல் பாவித்து சிறந்த முறையில் நிர்வகித்து வந்ததால், பங்குதாரர்களிடம் அவருக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அவர் நிறுவனத்தை விட்டு போனால், 
குறைந்தது 10 சதவீதமாவது அமேசான் நிறுவன பங்குகள் சரியும். இதை ஏனைய பங்குதாரர்கள் விரும்ப மாட்டார்கள். 

எனவே பேஜுஸ்-ன் வழியிலியே அமேசான் தனது தொடரும் என டி.ஏ. டேவிட்சன்-ஐ சேர்ந்த ஆய்வாளர் தாமஸ் ஃபோர்டே கூறி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings