வரும் காலத்தில் உலகை ஆளப் போவது இது தான் !

2 minute read
0
இந்த உலகத்தைப் பற்றிய நமது கணக்கீடுகள் தொடர்ந்து தவறுகிறது. இன்னும் நூறாண்டு களில் விஞ்ஞான வளர்ச்சி நம் கற்பனை க்கும் எட்டாத உயரத்தில் நிலை பெற்றிரு க்கும். அந்த உலகத்தோடு நம்மால் ஒத்துப் போக முடியுமா? வளர்ச்சி இருக்கட்டும்.
வாழ்வாதாரம் என்ன ஆகும்? இன்று கணினி அபரிமிதமான வளர்ச்சியை நமக்கு தந்திருப்பது போல வேலை வாய்ப்புகளை யும் அளித்தி ருக்கிறது.

ஆனால், இந்நிலை தொடராது. எதிர் காலத்தை ஆள இருப்பது கணினி மட்டுமல்ல. அதற்கும் மேலே ஒரு ராட்சசன் இருக்கிறது. எதிர் காலத்தில் கணினித் துறையில் வேலை பார்க்கும் மக்களில் 75% மக்கள் தங்கள் வேலையே இழக்க இருக்கி றார்கள்.

ராட்சசன்


செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligens) என்னும் துறை பற்றி படித்திருக் கிறீர்களா? அதைக் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக் கின்றன. இதனை அடிப்படை யில் தரம் உயர்த்தப் பட்ட கணினி என்று சொல்லலாம்.

எவ்வளவு தரம் உயர்த்தப்படும் என்பதில் தான் விஷயம் இருக்கிறது. இன்று ரோபோக் களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டு செயல் படுத்த வைக்கிறார்கள்.
மறைந்திருந்து நம் உடலை தாக்கும் அக்கி !
செயற்கை நுண்ணறிவு ரோபோக் களை இயங்க வைக்கும். சூழல் சார்ந்த முடிவுகளை மனிதன் எடுப்பது போல் அவையும் நடந்து கொள்ளும். ரோபோக் களுக்கு உள்ளே ஒரே செயலுக்கு பல கட்டளைகள் கொடுக்கப் பட்டிருக்கும்.

அவற்றி லிருந்து சரியான, துல்லியமான முடிவை நோக்கிச் செயல்படும். மிகச் சிக்கலான வேலை களைக் கூட இதன் மூலம் செய்து முடிக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று மனிதர்கள் பார்க்கும் தகவல் உள்ளீடு, சரி பார்த்தல், திருத்துதல் ஆகிய வற்றை எதிர் காலத்தில் செயற்கை நுண்ணறி வுடன் இயங்கும் ரோபோக்கள் செய்து விடும். 

இன்று நூறு மனிதர்கள் செய்யும் வேலையினை அதை விடத் துல்லியமாக ஒரே கணினி செய்கிற தல்லவா? அதே போல் ஆயிரம் கணினி களுக்கான கட்டளை களை அளித்து பணி முடிக்கும் திறன் செயற்கை நுண்ணறிவு மூலம் சாத்திய மாக்கப்படும்.

அப்படி யென்றால் மனிதர் களுக்கு வேலை? அங்குதான் வருகிறது பிரச்சனை.

அறிவியல், தொழில் நுட்பம்

தொழில்நுட்பத் துறையில் கடைசியாகப் புதிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்திய இந்தியர் களை விரல் விட்டு எண்ணி விடலாம். கடந்த 50 வருடங்களில் நோபல் பரிசு வென்ற இந்தியர்கள் எத்தனை பேர்? வெறும் 5 நபர்கள்.

அதிலும் அறிவியலில் இரண்டு மட்டுமே. மருத்துவத்தில் ஒன்று. இதில் பெரிய அதிர்ச்சி என்ன வென்றால் எல்லோரும் வெளிநாட்டுவாழ் இந்தியர்.


அப்படியென்றால் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி ஏற்படவில்லையா? இல்லை என்பதே பதில். இந்தியாவில் இருப்பதெல்லாம் தொழில் நுட்பம் மட்டுமே.
தோல் தொல்லையும் அதற்கான காரணமும்  !
அறிவியலைப் பயன்பாட்டு க்கு எளிமையான வடிவில் கொண்டு வர செய்யப்படும் ஒரு யுக்தியே தொழில் நுட்பம். அறிவியல் புதிய சித்தாந் தங்களை உருவாக்குவது. அதற்குரிய கல்வி இங்கு இல்லை என்பதே நிதர்சனம்.

கல்வியா ? பயிற்சியா ?

நாம் இன்னும் ஆரம்பப் பள்ளிக்கு லட்சக் கணக்கில் வசூலிக்கும் பள்ளிகளையே நல்ல கல்வி அளிக்கும் இடங்கள் என நினைக்கிறோம். மதிப்பெண் களை நம்பிய கல்வி. பயிற்சி சார்ந்த கல்விமுறை.
கொடுக்கப் பட்ட வேலைகளு க்குத் தகுந்தாற் போல் பணிபுரியும் பயிற்சியை மட்டுமே இவை அளிக்கிறது. இன்று பல தொழில் நுட்பக் கல்லூரிகள் அந்த பயிற்சி யினைக் கூட மாணவர் களுக்கு அளிப்ப தில்லை.

அறிவியலில் வளர்ச்சி என்பது மாணவர் களின் சிந்தனை களைத் தூண்டு வதிலேயே இருக்கிறது. கல்விச்சுமை இளம் சமுதாயத் தினரை அழுத்துகிறது. புதிய உயரங்களை அடைய விடாமல் அவர்களை கீழே இழுக்கிறது.
HIV நோயளிக்கு ARV தெரப்பி !
சிந்திப்ப தற்கான களத்தை மாணவர் களுக்கு ஒதுக்கினால் மட்டுமே எதிர்கால உலகத்தோடு நம்மால் போட்டி போட முடியும். மதிப்பெண் களை மட்டுமே நம்பும் நம் மாணவர்கள் கருத்தியல் ரீதியாக அறிவியலைப் புரிந்து கொள்ளும் காலமே இந்தியா வின் பொற் காலமாக இருக்கும்.

பெற்றோர் களும், கல்வி நிறுவனங்களும் தங்களது கல்வி சார்ந்த நிலைப் பாட்டினை மாற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 16, April 2025
Privacy and cookie settings