மகனை பறிகொடுத்த தாய் கதறல் - உதவிய கலெக்டரின் மனிதநேயம் !

0
நெல்லை மாவட்டத்தில், மது போதையில் சென்ற இளைஞர்கள் ஏற்படுத்திய விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டன. 


ஆதரவற்ற நிலையில் கதறித் துடித்த தாயை நேரில் சென்று சந்தித்த நெல்லை கலெக்டர், முதியோர் உதவித் தொகை கிடைப்பதற் கான ஆணை வழங்கிய மனிதநேயம் பாராட்டைப் பெற்றுள்ளது.

நெல்லை மாவட்டம் விக்கிரம சிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரான பழனிக்குமார், கடந்த 2-ம் தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். 

தனது நண்பருடன் கடைக்குச் சென்றபோது, எதிரில் குடிபோதை யில் ஒரே பைக்கில் 3 பேருடன் வேகமாக வந்த பைக் மோதியது. 

அதில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பழனிக்குமார், பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் மூளைச்சாவு அடைந்தார். கடந்த சில வருடங் களுக்கு முன்பு கணவனை இழந்து, ஒரே மகனையும் இழந்ததால், தாய் சாரதா கதறித்துடித்தார். 

அவரது உடலின் பாகங்களைத் தேவை இருக்கும் நோயாளி களுக்கு வழங்க அவர் முன் வந்ததால், பழனிக் குமாரின் உடல் பாகங்களை மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள்.

பழனிக் குமாரின் இதயம், இரு கிட்னிகள், கல்லீரல், கண், தோல் உள்ளிட்டவை எடுக்கப் பட்டன. அவரது இதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக ஒரு நோயாளிக்கு பொருத்தப் பட்டது. மதுரையில் உள்ள ஒரு நோயாளிக்கு ஒரு கிட்னி பொருத்தப் பட்டது. 


மற்றொரு கிட்னியை பாளையங் கோட்டையில் உள்ள நோயாளிக்கு ஆபரேஷன் மூலம் மருத்துவர்கள் பொருத்தி னார்கள். தோல் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் நோயாளி களுக்குப் பொருத்தப் பட்டன. 

அவற்றைப் பெற்ற நோயாளிகள், தற்போது நல்ல உடல் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். 

இந்த நிலையில், தனக்கான ஒரே ஆதரவையும் இழந்து தவித்த தாய் சாரதா மற்றும் சமூக ஆர்வலர்கள், நெல்லை ஆட்சியரைச் சந்தித்து மகனை இழந்தவருக்கு முதியோர் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத் தினார்கள். 
அதை ஏற்றுக் கொண்ட நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், அம்பாச முத்திரம் சென்று, பழனிக் குமாரின் தாய் சாரதாவை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

மேலும்
அத்துடன், அவருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆர்டரை அளித்தார். ஆட்சியரின் இந்த மனிதநேய உணர்வை சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் வெகுவாகப் பாராட்டி னார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings